Wednesday, July 28, 2010

காற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்

இரண்டு வரிகளில் எதுகை மோனையாக தலைப்பு வைத்து கவர் ஸ்டோரி போட்டு கல்லா கட்டுவதில் வார இதழ்கள் கை தேர்ந்தவை. ஜூனியர் விகடன் மற்றும் குமுதம்-ரிப்போர்ட்டர் இதழ்களுக்குள் இதில் போட்டியே நடக்கும்.


"வரும்படிக்கு வழி செய்யும் வார்த்தை விந்தைகளை வாரஇதழ்கள் வழக்கமாக (அட.... நமக்கு கூட வருது...) பயன்படுத்துவார்கள். சாதாரண விசயத்தை தலைப்பில் பூதாகரமாக்கி உள்ளே படிக்கையில் புஸ்ஸ்......... என்று போக வைக்கும் பல விசயங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் இந்த புதனன்று ஜூனியர் விகடனில் வந்துள்ள "கடற்கரையில் காத்து வாங்க போன கலைஞரின்" கவர் ஸ்டோரி.





ஜூனியர் விகடன் - அட்டை படம் & கவர் ஸ்டோரிக்கான தலைப்பு . இந்த வரிகளின் அர்த்தத்தை ஒருமுறை மனத்தில் நினைத்துக்கொண்டு கீழே உள்ள படத்தில் கட்டம் கட்டிய வாக்கியங்களை படியுங்கள்...










அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு அசைவிற்க்கும் அர்த்தம் கற்ப்பித்து இவர்கள் போடும் கவர் ஸ்டோரி பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும்.


"ஆளுங்கட்சிக்கு ஆப்பு... அம்மாவின் அதிரடி" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி போடுவார்கள். உள்ளே படித்தால் "ஜெயலலிதா புதிதாக வாங்கியுள்ள வெளிநாட்டு டீவியில் கலைஞர் டீவி அல்லது சன் டீவியை செலக்ட் செய்தால் டீவி தானாகவே ஆஃப் ஆகிவிடுமாம்...." என்ற ரேஞ்சிக்கு மேட்டர் இருக்கும்...


ரஜினியின் புதுபட ரிலீசின்போது வாரஇதழ்களில் "அரிதாரத்துக்கு சலோ ... ஆன்மீகத்துக்கு ஹலோ", "சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்" என்ற மாதிரியான தலைப்பில் "ரஜினி இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு" என்று ஒரு கவர் ஸ்டோரி கட்டாயம் வெளிவரும்.


சிவாஜி படம் படபிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், "சிவாஜி படத்தின் கதை", "தமிழ் இதழ்களில் முதல்முறையாக" என்று பில்டப் கொடுத்து ஒரு கதையை போட்டு இருந்தார்கள்
( குமுதமா இல்ல ஆ. விகடனான்னு சரியா ஞாபகம் இல்லை...) படம் வந்த பிறகு படத்தின் கதைக்கும் அவங்க போட்டுருந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை.


ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் பண்ணும் அளப்பரை.... ஸ்ஸ்........... யெப்பா.. தாங்க முடியலை.போகிற போக்கை பார்த்தால் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலை மைய்யப்படுத்தி "கலைஞரின் கடைசி தேர்தலாய் மாறப்போகும் கண்ணம்மா பேட்டை கவுன்சிலர் தேர்தல்" அப்படீன்னு கவர் ஸ்டோரி போட்டாலும் போடுவார்கள்.


இது போன்ற கவர் ஸ்டோரி மேட்டரை பார்க்கும்போது "புலி வருது" கதைதான் ஞாபகத்துக்கு வருது.....







(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )

23 comments:

Anonymous said...

Good one....
-Santhosh

சி.பி.செந்தில்குமார் said...

அட்டகாசம்.நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை

a said...

வாங்க சந்தோஷ. ரொம்ப நன்றி....

a said...

நன்றி சி.பி.செந்தில்குமார்.

எம்.எம்.அப்துல்லா said...

ஒரு வழியா பதிவர் ஆயிட்டீங்க :))

a said...

Abdullah Anne: neenga usla enakku theetchai kodutheengale. Athan karanam.

Chitra said...

=)) இன்னும்மா உலகம் இவங்களை (குமுதம்/விகடன்) நம்புது?

Anonymous said...

As you rightly said, all things to fill up the "galla" only and nothing else

a said...

@@chitra: enakkum athey santhegamthanka

a said...

@@Ananias sir: yes.filling Galla is their main goal.

Unknown said...

நல்லாத்தான் கல்லா கட்டி இருக்காங்க...

ADAM said...

haa haa

a said...

//
Radha said...
நல்லாத்தான் கல்லா கட்டி இருக்காங்க...
//
ஆமாங்க்கோவ் ...........

நசரேயன் said...

//ஒரு வழியா பதிவர் ஆயிட்டீங்க :))//

அண்ணே பிரபல பதிவர்

a said...

[[
நசரேயன் said...
//ஒரு வழியா பதிவர் ஆயிட்டீங்க :))//

அண்ணே பிரபல பதிவர்
]]

தள: நல்லாத்தான போயிகிட்டு இருக்கு....

a said...

வருகைக்கு நன்றி ஆடம்...

Anonymous said...

I hate reading those books. most of the time they are publishing these kind of dummy matters only...

a said...

@@ Anani : you are correct!!!!!

ராம்ஜி_யாஹூ said...

stop subscribing to vikatan, kumudham websites, be happy

ஜோதிஜி said...

ஓட்டும் போட்டாச்சு. இனிமேல் உங்களை தொடர்ந்து படிக்கனும். காரணம் பல மாதங்கள் ஆகி விட்டது பத்திரிக்கைகள் படித்து.

ஜோதிஜி said...

முனைவர் பட்டத்துக்கு இது போன்ற கட்டுரைத் தலைப்புகள் எதிர்காலத்திற்கு உதவுமா நண்பா?

a said...

//
ஜோதிஜி சைட்...
ஓட்டும் போட்டாச்சு. இனிமேல் உங்களை தொடர்ந்து படிக்கனும். காரணம் பல மாதங்கள் ஆகி விட்டது பத்திரிக்கைகள் படித்து
//

நாம அந்த அளவுக்கு ஒர்த் இல்லீங்கோ....

RAGUNATHAN said...

ஜோதிஜி கேட்பது போல மூன்று மாதமாக நான் இதை நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதழியலில் phd க்கான தலைப்பு இது. வார இதழ்களில் எதுகை மோனை தலைப்புக்கள் என்று வைக்கலாம். கவர்ச்சி தலைப்புகள், பரபரப்பு தலைப்பு, பாலுணர்வை தூண்டும் தலைப்பு (இதற்கு நக்கீரனை அடித்துக்கொள்ள எந்த இதழும் இல்லை) என்று பல தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம்.

நல்ல பதிவு நண்பா. :)

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment