Monday, July 5, 2010

FeTNA விழாவில் நடிகை பிரியாமணிக்கு முத்தம் - இன்ப அதிர்ச்சியில் பதிவர்.அமெரிக்காவின், ஜுலை 3,4 தேதிகளில் நடைபெற்ற FeTNA - 2010 விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பிரியாமணி கலந்து கொண்டார்.ஜூலை 4 ம் தேதி, விழாவில் பதிவர் ஒருவருக்கு பிரியாமணியால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி....

அந்த பதிவர் யாருன்னு தானே கேக்குறீங்க : ஹி ஹி ஹி, நானேதான்.

அந்த சம்பவம் நடந்தப்ப ராத்திரி 8 மணி இருக்குங்க, நானும் அப்துல்லாவும் பசிக்கிதேன்னு பழமைபேசிக்கிட்ட இருந்த சாப்பாட்டு டோக்கனை வாங்கிக்கிட்டு நைசா சாப்பாடு போடுற ஏரியா பக்கமா ஒதுங்கினோம். சாப்பாட்ட ஒரு கட்டு கட்டிட்டு சாப்பாடு தட்ட குப்பையில போடுறதுக்காக
போயிக்கிட்டு இருந்தோம்.. போற வழியில ஒரு பெரிய FAN வச்சிருந்தாங்க.. கல்யாணமண்டபத்திலலாம் வப்பாங்கள்ல...... அந்த மாதிரி பெரிய FAN.

நான் அந்த FAN கிட்ட போகும்போது என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த பேப்பர் நாப்கின்

[ நம்மூருல இத டிஷ்யூனு சொல்லுவோம். இந்தூருல பேப்பர் நாப்கின்னு சொல்லுவாங்க. இந்த ஊருக்கு வந்த புதுசுல ஒரு ஓட்டல்ல வாய் தொடக்கிற டிஷ்யூ குடுங்கனு கேட்டதுக்கு, அங்க இருந்த அகராதி புடிச்ச பய புல்ல, "தம்பி, வாய் தொடக்கிற நாப்கின்னு கேளு, டிஷ்யூவால தொடக்கிற இடம் வேறன்னு சொல்லி நம்மள டேமேஜ் பண்ணுச்சி.... அது ஒரு தனி கதை... அத பத்தி அப்பாலிக்கா பேசுவோம்.]

சரி எங்க உட்டேன், ஆங்... நாப்கின்ல... என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த நாப்கின் FAN காத்துல சட்டுனு பறந்து போயி FANக்கு நேரா ஒக்காந்து சாப்டுகிட்டு இருந்த பிரியாமணி கன்னத்துல பட்டு கீழ விழுந்துது. டக்குன்னு
திரும்புன பிரியாமணி அதோட கன்னத்துல கை வச்சி பாத்துச்சி. கீழ கிடந்த napkina பாத்திச்சி, எனக்கா பதட்டதுல ஒண்ணும் புரியல... ஞே!!! ன்னு முழுச்சிகிட்டு நிக்கிறேன். பிரியாமணியையும் FANயும் மாத்தி மாத்தி பாக்குறேன். நா முழிச்ச முழியில அதுக்கு என்ன நடந்துருக்குன்னு தெரிஞ்சி போச்சி. என்ன பாத்து லேசா சிரிச்சிது... என்னோட குரல் எனக்கே கேக்காத மாதிரி "சாரி" ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

ராத்திரி ஓட்டல் ரூமுல அர தூக்கத்துல இருந்த அப்துல்லாவ எழுப்பி, "ஏண்னே, நான் வாய் தொடச்ச நாப்கின் காத்துல பறந்து போயி பிரியாமணி கன்னத்துல பட்டுச்சில்ல,அப்ப நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?"ன்னு கேட்டா, கொலை வெறியில் அடிக்க வரார்......

இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க, நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?
10 comments:

ராம்ஜி_யாஹூ said...

பெட்னாவில் ப்ரியாமணியின் தமிழ் தொண்டு , கானொளியில் கிடைக்குமா. நான் நேரலை ஒளி பரப்பும் பொழுது தூங்கி விட்டேன்

அபி அப்பா said...

என்னது அப்துல்லா ஆஃப் தூக்கத்துல இருந்தாரா? உடனே போட்டோ எடுத்து அனுப்ப வேண்டியது தானே? என்ன பையன் நீ?

உனக்கு இங்க பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க. பொன்ணு வீட்டில பையன் பெரிய எழுத்தாளர்"கம்பியூட்டர்ல" எல்லாம் எழுதுவார்ன்னு சொல்லி இந்த பிரியாமணி பதிவை காட்டிட்டா போச்சு. அப்புறம் கண்ணாலத்துக்கு பிரியா விடை தாண்டீ:-))

ச்சின்னப் பையன் said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
ராம்ஜி_யாஹூ said...
பெட்னாவில் ப்ரியாமணியின் தமிழ் தொண்டு , கானொளியில் கிடைக்குமா. நான் நேரலை ஒளி பரப்பும் பொழுது தூங்கி விட்டேன்
//

ராம்ஜி : பழமைப்பேசி அண்ணன் வலைத்தளத்தில் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்து வருகிறார்...

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
அபி அப்பா Said...
என்னது அப்துல்லா ஆஃப் தூக்கத்துல இருந்தாரா? உடனே போட்டோ எடுத்து அனுப்ப வேண்டியது தானே? என்ன பையன் நீ?
//

போட்டோ எல்லாம் எடுத்தாச்சி... இளா கிட்ட இருக்கு...

//
அபி அப்பா Said
உனக்கு இங்க பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க. பொன்ணு வீட்டில பையன் பெரிய எழுத்தாளர்"கம்பியூட்டர்ல" எல்லாம் எழுதுவார்ன்னு சொல்லி இந்த பிரியாமணி பதிவை காட்டிட்டா போச்சு. அப்புறம் கண்ணாலத்துக்கு பிரியா விடை
//

ஏன் இந்த கொல வெறி????

பழமைபேசி said...

மகிழ்ச்சிங்க...மீண்டும் சந்திப்போம்!!!

பரிசல்காரன் said...

இதெல்லாம் வேற நடந்துச்சா.. ஐ வாண்ட் மோஓஓஒர்ர்ர்ர்ர்ர்...

yogesh said...

//
பரிசல்காரன் said...
இதெல்லாம் வேற நடந்துச்சா.. ஐ வாண்ட் மோஓஓஒர்ர்ர்ர்ர்ர்...
//

நானும் ஒன்ஸ் மோர் நடத்தலாம்ன்னு Washington DC ல இந்த வாரம் நடந்த தமிழ் விழாவுக்கு போலாம்ன்னு நினச்சேன். சில உள்நாட்டு சதிகளால் முடியாமல் போய்விட்டது. உங்கள் ஆசையை கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேத்துவேன் என்று சபதம் செய்கிறேன்.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
ச்சின்னப் பையன் Said
அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
//
சரி சரி... இதுக்கெல்லாம் போயி காதால புகை விடலாமா....

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
பழமைபேசி Said...
மகிழ்ச்சிங்க...மீண்டும் சந்திப்போம்!!!
//
எப்போ எங்க எப்படி சந்திக்கப்போறோம்... நீங்கதான் சொல்லணும்.

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment