Thursday, July 29, 2010

ஓ-ஞாநி:பத்திரிக்கை சுதந்திரம்-பறிக்கப்படும் தந்திரம்

"உருப்படியா எழுத விடாம உருளைகிழங்கை பத்தி எழுத வக்கிராங்க..." , ஜுலை 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அமெரிக்காவின் - அட்லாண்டிக் எக்ஸ்பிரஸ்வேயில் காரில் சென்று கொண்டு இருக்கயில் ஞாநி சொன்ன வார்த்தை......


அன்றிரவு கார் பயணத்தில் குமுதம்- ஓ பக்கங்கள் சம்பந்தமான பேச்சே அதிகம் பயணித்தது. வார்த்தை முடிவுகள் கடிதமாய் மாறியுள்ளது இப்போது......


சமீப காலமாய் ஞாநியின் கட்டுரைகளின் சில சாராம்சங்கள் குறிப்பாக அரசுக்கு, ஆளும் கட்சிக்கு எதிரான விசயங்கள் குமுதம் நிர்வாகத்தால் நீக்கப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ வெளிவந்தன. மேல்மட்ட நிர்வாகத்தில் வந்துள்ள பிரிவினை இதற்கான அடித்தளம் என்று தெரிகிறது...


"எழுத்தில் சமரசம் என்பது எனக்கு ஒத்துவராத விசயம், இந்தியா திரும்பியவுடன் என்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்தி இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்பதே அவருடைய இறுதி முடிவாய் இருந்தது. அந்த முடிவு மின்னஞ்சல் வாயிலாக குமுதத்தை சென்றடைந்திருக்கிறது.


குமுதம் வார இதழில் தன்னால் ஓ பக்கங்கள் கட்டுரையை தொடர்ந்து எழுத முடியாததற்கான காரணங்களை தெரியப்படுத்தி அதனை தனது வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.



ஞாநி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதங்கள்












எனக்கு ஒரே ஒரு சந்தேகம் : பத்திரிக்கை (சு)தந்திரம், அச்சு ஊடக (அ)சாத்தியம், ஊடக தார்(மீகம்) அப்படீனெல்லாம் பேசுறாங்களே... அப்படின்னா என்னங்க???


(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )


Wednesday, July 28, 2010

காற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்

இரண்டு வரிகளில் எதுகை மோனையாக தலைப்பு வைத்து கவர் ஸ்டோரி போட்டு கல்லா கட்டுவதில் வார இதழ்கள் கை தேர்ந்தவை. ஜூனியர் விகடன் மற்றும் குமுதம்-ரிப்போர்ட்டர் இதழ்களுக்குள் இதில் போட்டியே நடக்கும்.


"வரும்படிக்கு வழி செய்யும் வார்த்தை விந்தைகளை வாரஇதழ்கள் வழக்கமாக (அட.... நமக்கு கூட வருது...) பயன்படுத்துவார்கள். சாதாரண விசயத்தை தலைப்பில் பூதாகரமாக்கி உள்ளே படிக்கையில் புஸ்ஸ்......... என்று போக வைக்கும் பல விசயங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் இந்த புதனன்று ஜூனியர் விகடனில் வந்துள்ள "கடற்கரையில் காத்து வாங்க போன கலைஞரின்" கவர் ஸ்டோரி.





ஜூனியர் விகடன் - அட்டை படம் & கவர் ஸ்டோரிக்கான தலைப்பு . இந்த வரிகளின் அர்த்தத்தை ஒருமுறை மனத்தில் நினைத்துக்கொண்டு கீழே உள்ள படத்தில் கட்டம் கட்டிய வாக்கியங்களை படியுங்கள்...










அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் ஒவ்வொரு அசைவிற்க்கும் அர்த்தம் கற்ப்பித்து இவர்கள் போடும் கவர் ஸ்டோரி பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கும்.


"ஆளுங்கட்சிக்கு ஆப்பு... அம்மாவின் அதிரடி" என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி போடுவார்கள். உள்ளே படித்தால் "ஜெயலலிதா புதிதாக வாங்கியுள்ள வெளிநாட்டு டீவியில் கலைஞர் டீவி அல்லது சன் டீவியை செலக்ட் செய்தால் டீவி தானாகவே ஆஃப் ஆகிவிடுமாம்...." என்ற ரேஞ்சிக்கு மேட்டர் இருக்கும்...


ரஜினியின் புதுபட ரிலீசின்போது வாரஇதழ்களில் "அரிதாரத்துக்கு சலோ ... ஆன்மீகத்துக்கு ஹலோ", "சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பிளான்" என்ற மாதிரியான தலைப்பில் "ரஜினி இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு" என்று ஒரு கவர் ஸ்டோரி கட்டாயம் வெளிவரும்.


சிவாஜி படம் படபிடிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், "சிவாஜி படத்தின் கதை", "தமிழ் இதழ்களில் முதல்முறையாக" என்று பில்டப் கொடுத்து ஒரு கதையை போட்டு இருந்தார்கள்
( குமுதமா இல்ல ஆ. விகடனான்னு சரியா ஞாபகம் இல்லை...) படம் வந்த பிறகு படத்தின் கதைக்கும் அவங்க போட்டுருந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை.


ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்கள் பண்ணும் அளப்பரை.... ஸ்ஸ்........... யெப்பா.. தாங்க முடியலை.போகிற போக்கை பார்த்தால் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலை மைய்யப்படுத்தி "கலைஞரின் கடைசி தேர்தலாய் மாறப்போகும் கண்ணம்மா பேட்டை கவுன்சிலர் தேர்தல்" அப்படீன்னு கவர் ஸ்டோரி போட்டாலும் போடுவார்கள்.


இது போன்ற கவர் ஸ்டோரி மேட்டரை பார்க்கும்போது "புலி வருது" கதைதான் ஞாபகத்துக்கு வருது.....







(பதிவு புடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போங்களேன்.... )

Thursday, July 15, 2010

பாவம் இந்த கிளி...

பாவம் இந்த கிளி... யாராவது வேலை கொடுங்கப்பா....




மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பர் ஹேம்ராஜ்க்கு நன்றி.

Wednesday, July 14, 2010

அமெரிக்காவில் ஞாநியுடன் மூன்று நாட்கள்.


எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,பத்திரிக்கையாளர், திரைப்பட,
குறும்பட/ தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர், நாடகாசிரியர் (உஸ்...........யப்பா.. கண்ண கட்டுதே...) ஞாநி அவர்கள் ஜூன் 18 முதல் ஜுலை 11 வரை அமெரிக்காவில் பல பகுதிகளில் சுற்று பயணம் மேற்க்கொண்டார். ஜுலை 6,7,8 தேதிகளில் பிலடெல்பியாவில் எம்முடைய விருந்தினராக....

தினமும் இரவு 2 மணி வரை பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

மனிதர் ரொம்பவும் எளிமையாக இருக்கிறார். முதல் நாள் அவரை அழைத்து வரும்போது நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று சற்றே படபடப்போடு இருந்தேன். இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் காலையில் நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க "யோகேஷ், காப்பி சாப்பிடலாமா..." என்று திடீர் குரல் கேட்டு எழுந்தேன். கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் அட்லான்டிக் சிட்டியில் உள்ள கேசினோ சென்று வந்தோம். இரவு நேர கார் பயணம் சோம்பலாக இல்லாமல் வெகு அருமையாக இருந்தது அவருடன் பேசிக்கொண்டே செல்கையில்.

மறுநாள் பிலடெல்பியாவில் லங்காஸ்டர் பகுதியில் உள்ள "ஆமிஷ் வில்லேஜ்" சென்றோம்.
(ஆமிஷ் மக்கள், அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விவரங்களுடன் விரைவில் ஒரு பதிவெழுத எண்ணம்.)

நான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில்...



ஆமிஷ் வில்லேஜ்ல் ஞாநியுடன் நான்...


வரும் வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு, பல விசயங்களை பேசிக்கொண்டு வந்தோம்.... பேச்சு பதிவுலகம் பக்கமும் பயணித்தது (ஆதியின் நர்சிம் பேட்டி முதல், மங்களூர் சிவாவின் செந்தழல் ரவிக்கான பதில் பதிவு வரை....)

வழியில் காரில் கடந்த ஒரு பாலத்தை அவரிடம் காட்டி "சார், இதுதான் பெஞ்சமின் பிராங்க்ளின் பாலம்" என்று சொல்ல "அப்படியா, பெஞ்சமின் எனக்கு பிடித்த மனிதர், அவர் ஒரு விசயத்தை கண்டுபிடித்தார், என்னனு சொல்லுங்க பாப்போம்" என்று அவர் என்னை திருப்பி கேக்க, நான் அவரை பார்த்த பார்வையில் அவரே பதிலையும் சொன்னார், மின்னலில் மின்சாரம் இருக்கிற விசயத்தை கண்டுபிடித்தவராம் பெஞ்சமின்.(நமக்கு மின்னலில் கண்டுபிடிக்கப்பட்ட ரீமாசென்ஐ பற்றி கேட்டால் தெரியும். நம்மகிட்ட போயி அந்த மின்னல பத்தி கேட்டா...)

பிலடெல்பியாவில் நடைபெற்ற "பிட்லர் ஆன் தி ரூஃப்" என்ற ஒரு மேடை நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார், டிக்கெட் கிடைக்காததால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இரவு உணவுக்குப்பின் நாங்கள் இருவரும் உரையாடியதை வீடியோவாக (ஹலோ, ஏன் பேட்டின்னு சொன்னவுடனே பேஸ்தடிச்சி பதிவ மூடிட்டு கிளம்புரீங்க... தொடர்ந்து படிங்க)
பதிவு செய்தேன். விரைவில் உங்கள் பார்வைக்கு.

மூன்றாம் நாள் டிரென்டன் ரயில் நிலையத்தில் நியூயார்க் செல்வதர்க்காக வழியனுப்பி வைத்து விடைப்பெற்றுக்கொண்டேன்.


டிரென்டன் ரயில் நிலைய முகப்பில் ஞாநி....

அவருடனான எனது மூன்று நாட்கள் ஒரு இனிய அனுபவம்......

ஞாநி சார் : நன்றிகள் பல.....

(ஞாநியின் வலைத்தளம் : http://www.gnani.net )

Saturday, July 10, 2010

FeTNAவும், பழமைபேசியும், நானும்...


வணக்கங்க யோகேஸ்வரன், நலமா இருக்கீங்களா" என்று தொலைபேசி உரையாடலை இவர் தொடங்கும்போது அவருடைய உற்சாகம் நம்மயும் தொற்றிக்கொள்ளும்.

FeTNA விழாவுக்கு அவசியம் வாங்க என்று இவர் அழைத்தபோது முடிந்தால் போவோம் என்று நினைத்து முன்பதிவு செய்தேன்.விழாவின் முதல்நாள் அலுவலகத்தில் ஆணிகள் பல. விழாவிற்க்கு செல்ல வேண்டாம் என்று நினைத்த என்னை இரண்டாம் நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது இவருடைய நேரடி வர்ணனை....

விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை முகம் கோணாமல் செய்து,பதிவுலக நண்பர்களை அறிமுகப்படுத்தி, உபசரித்து .... இன்னும் பல சொல்லலாம்.



அப்துல்லாவுடன் பழமைபேசி


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் பழமைபேசி


பழமைபேசி எழுதிய "ஊர்ப் பழமை" புத்தகம் விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நானும் ஒன்று வாங்கியுள்ளேன் (ஹலோ, ஓசியில இல்லங்க, காசு கொடுத்துத்தான், நம்புங்க...)

புத்தகத்தின் முதல் பக்க அட்டை



புத்தகத்தின் கடைசி பக்க அட்டை

நேற்று அலைப்பேசியில் அளவளாவிக்கொண்டிருக்கயில் "பழமை அண்ணே, விழாவுக்கு அவளவு தூரம் வந்துட்டு திரும்பியது களைப்பாக இருக்கிறது, இந்த வீக் எண்ட் ஃபுல்லா வீட்டுல ரெஸ்ட் தான், நீங்க பாவம் ரொம்ப களைப்பா இருப்பீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க"னு சொன்ன எனக்கு அவரின் பதில்.

"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."

பழமைபேசி அண்ணே, உங்கள நெனச்சா எனக்கு தசவாதாரம் படத்துல வர இந்த வசனம்தான் ஞாபகம் வருது.

"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்."



அமெரிக்காவில் அப்துல்லா.....


FeTNA விழாவின் கவியரங்கம் மற்றும் இலக்கிய வினாடி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவின் Connecticut நகருக்கு வருகை புரிந்த அப்துல்லாவை விழாவின் இரண்டாம் நாளில் சந்தித்தேன்.

நான் சந்தித்த சமயம் அவருடைய அலைப்பேசியை காணவில்லை (ஹலோ.. என்ன ஏன் சந்தேகமா பாக்குறீங்க???). பழமைப்பேசி,இளா,நசரேயன் உடன் நானும் சேர்ந்து எல்லாரும் அவரவர் மொபைல்லில் அவருடைய நம்பருக்கு தொடர்புகொள்ள, தொலைந்த மொபைல் வரவேற்ப்பறை பகுதியில் இருப்பதாக தெரிந்து அங்கே சென்றோம். "உங்க மொபைல் எப்படி இருக்கும்? அடையாளம் சொல்லுங்க" என்று கேட்டவரிடம் "மொபைல்ல குடுங்க பாத்து அடயாளம் சொல்லுறேன்"னு அப்துல்லா கலாய்க்க, ஒரு வழியாய் மொபைல் அப்துல்லா கைக்கு திரும்ப வந்தது.

அப்துல்லாவுடன் நான்...

அவர் பங்குபெரும் நிகழ்ச்சிகள் முடியும் வரை சற்றே பதட்டமாய் இருந்தவர் (டெடீகேசனாம்..) அதன் பிறகு பட்டாசு கிளப்பினார்... "மதுரை வீரன்" தெருக்கூத்து நிகழ்ச்சியின் போது அப்துல்லா அடித்த விசில் சத்தம் பிரமாதம்.

நானும் அப்துல்லாவும் இரவு சாப்பிட போகும்போது ஒரு சுவாரசியமான மேட்டர் நடந்தது . அதைப்பற்றி இந்த பதிவில் எழுதிஇருக்கிறேன்.

இலங்கைப் பொருள்களை புறக்கணிக்க சொல்லி ஒரு குழுவினர் பறை அடித்து சொல்லிக்கொண்டிருக்க, அப்துல்லாவும் அவர்களுடன் சேர்ந்து பறை அடித்து அமர்களப்படுத்தினார். இனிமே நாம யாரும் இலங்கை பிரச்சினைக்காக அப்துல்லா என்ன பண்ணினார்ன்னு கேக்கமுடியாது. அவருடைய நிலைப்பாட்டை "பறை அடித்து" பறைசாற்றி இருக்கிறார்.


பறையுடன் அப்துல்லா...


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் அப்துல்லா...

விழாவின் இறுதி நாளின் மதியவேளை வரை அவருடன் இருந்தேன். மனிதர் ரொம்ப இனிமையாக பழகுகிறார்.... நேற்று மாலை விமான நிலயத்தில் இருந்து தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டார்.

தங்களை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே. FeTNAவில் அப்துல்லாவை நான் சந்திக்க ஏற்பாடு செய்த அண்ணன் பழமைபேசிக்கு எனது நன்றிகள்..

Monday, July 5, 2010

FeTNA விழாவில் நடிகை பிரியாமணிக்கு முத்தம் - இன்ப அதிர்ச்சியில் பதிவர்.



அமெரிக்காவின், ஜுலை 3,4 தேதிகளில் நடைபெற்ற FeTNA - 2010 விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பிரியாமணி கலந்து கொண்டார்.ஜூலை 4 ம் தேதி, விழாவில் பதிவர் ஒருவருக்கு பிரியாமணியால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி....

அந்த பதிவர் யாருன்னு தானே கேக்குறீங்க : ஹி ஹி ஹி, நானேதான்.

அந்த சம்பவம் நடந்தப்ப ராத்திரி 8 மணி இருக்குங்க, நானும் அப்துல்லாவும் பசிக்கிதேன்னு பழமைபேசிக்கிட்ட இருந்த சாப்பாட்டு டோக்கனை வாங்கிக்கிட்டு நைசா சாப்பாடு போடுற ஏரியா பக்கமா ஒதுங்கினோம். சாப்பாட்ட ஒரு கட்டு கட்டிட்டு சாப்பாடு தட்ட குப்பையில போடுறதுக்காக
போயிக்கிட்டு இருந்தோம்.. போற வழியில ஒரு பெரிய FAN வச்சிருந்தாங்க.. கல்யாணமண்டபத்திலலாம் வப்பாங்கள்ல...... அந்த மாதிரி பெரிய FAN.

நான் அந்த FAN கிட்ட போகும்போது என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த பேப்பர் நாப்கின்

[ நம்மூருல இத டிஷ்யூனு சொல்லுவோம். இந்தூருல பேப்பர் நாப்கின்னு சொல்லுவாங்க. இந்த ஊருக்கு வந்த புதுசுல ஒரு ஓட்டல்ல வாய் தொடக்கிற டிஷ்யூ குடுங்கனு கேட்டதுக்கு, அங்க இருந்த அகராதி புடிச்ச பய புல்ல, "தம்பி, வாய் தொடக்கிற நாப்கின்னு கேளு, டிஷ்யூவால தொடக்கிற இடம் வேறன்னு சொல்லி நம்மள டேமேஜ் பண்ணுச்சி.... அது ஒரு தனி கதை... அத பத்தி அப்பாலிக்கா பேசுவோம்.]

சரி எங்க உட்டேன், ஆங்... நாப்கின்ல... என்னோட சாப்பாட்டு தட்டுல நான் வாய் தொடச்சிட்டு வச்சிருந்த நாப்கின் FAN காத்துல சட்டுனு பறந்து போயி FANக்கு நேரா ஒக்காந்து சாப்டுகிட்டு இருந்த பிரியாமணி கன்னத்துல பட்டு கீழ விழுந்துது. டக்குன்னு
திரும்புன பிரியாமணி அதோட கன்னத்துல கை வச்சி பாத்துச்சி. கீழ கிடந்த napkina பாத்திச்சி, எனக்கா பதட்டதுல ஒண்ணும் புரியல... ஞே!!! ன்னு முழுச்சிகிட்டு நிக்கிறேன். பிரியாமணியையும் FANயும் மாத்தி மாத்தி பாக்குறேன். நா முழிச்ச முழியில அதுக்கு என்ன நடந்துருக்குன்னு தெரிஞ்சி போச்சி. என்ன பாத்து லேசா சிரிச்சிது... என்னோட குரல் எனக்கே கேக்காத மாதிரி "சாரி" ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

ராத்திரி ஓட்டல் ரூமுல அர தூக்கத்துல இருந்த அப்துல்லாவ எழுப்பி, "ஏண்னே, நான் வாய் தொடச்ச நாப்கின் காத்துல பறந்து போயி பிரியாமணி கன்னத்துல பட்டுச்சில்ல,அப்ப நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?"ன்னு கேட்டா, கொலை வெறியில் அடிக்க வரார்......

இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க, நான் பிரியாமணிக்கு முத்தம் கொடுத்ததா தானே அர்த்தம்?




Saturday, July 3, 2010

அமெரிக்காவில் ஞாநி....




ஞாநி அவர்கள் கடந்த இரு வாரமாக அமெரிக்க சுற்று பயணத்தில் இருக்கிறார். தற்சமயம் நியூஜெர்ஸியில்..

July 6,7,8 தேதிகளில் எம்முடைய விருந்தினராக தங்குகிறார். அட்லாண்டிக் சிட்டியில் உள்ள CASINO மற்றும் பிலடெல்பியாவில் உள்ள AMISH VILLEAGE அழைத்து செல்ல உத்தேசம்...

ஞாநியை சந்திக்க விரும்பும் பிலடெல்பியா பகுதி பதிவர்கள் என்னுடைய மின்னஞ்சலில்(vazhippokkann@gmail.com) தொடர்பு கொள்ளவும்...

ஞாநியின் வலைத்தளம் : http://gnani.net