Saturday, July 10, 2010

அமெரிக்காவில் அப்துல்லா.....


FeTNA விழாவின் கவியரங்கம் மற்றும் இலக்கிய வினாடி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவின் Connecticut நகருக்கு வருகை புரிந்த அப்துல்லாவை விழாவின் இரண்டாம் நாளில் சந்தித்தேன்.

நான் சந்தித்த சமயம் அவருடைய அலைப்பேசியை காணவில்லை (ஹலோ.. என்ன ஏன் சந்தேகமா பாக்குறீங்க???). பழமைப்பேசி,இளா,நசரேயன் உடன் நானும் சேர்ந்து எல்லாரும் அவரவர் மொபைல்லில் அவருடைய நம்பருக்கு தொடர்புகொள்ள, தொலைந்த மொபைல் வரவேற்ப்பறை பகுதியில் இருப்பதாக தெரிந்து அங்கே சென்றோம். "உங்க மொபைல் எப்படி இருக்கும்? அடையாளம் சொல்லுங்க" என்று கேட்டவரிடம் "மொபைல்ல குடுங்க பாத்து அடயாளம் சொல்லுறேன்"னு அப்துல்லா கலாய்க்க, ஒரு வழியாய் மொபைல் அப்துல்லா கைக்கு திரும்ப வந்தது.

அப்துல்லாவுடன் நான்...

அவர் பங்குபெரும் நிகழ்ச்சிகள் முடியும் வரை சற்றே பதட்டமாய் இருந்தவர் (டெடீகேசனாம்..) அதன் பிறகு பட்டாசு கிளப்பினார்... "மதுரை வீரன்" தெருக்கூத்து நிகழ்ச்சியின் போது அப்துல்லா அடித்த விசில் சத்தம் பிரமாதம்.

நானும் அப்துல்லாவும் இரவு சாப்பிட போகும்போது ஒரு சுவாரசியமான மேட்டர் நடந்தது . அதைப்பற்றி இந்த பதிவில் எழுதிஇருக்கிறேன்.

இலங்கைப் பொருள்களை புறக்கணிக்க சொல்லி ஒரு குழுவினர் பறை அடித்து சொல்லிக்கொண்டிருக்க, அப்துல்லாவும் அவர்களுடன் சேர்ந்து பறை அடித்து அமர்களப்படுத்தினார். இனிமே நாம யாரும் இலங்கை பிரச்சினைக்காக அப்துல்லா என்ன பண்ணினார்ன்னு கேக்கமுடியாது. அவருடைய நிலைப்பாட்டை "பறை அடித்து" பறைசாற்றி இருக்கிறார்.


பறையுடன் அப்துல்லா...


பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் அப்துல்லா...

விழாவின் இறுதி நாளின் மதியவேளை வரை அவருடன் இருந்தேன். மனிதர் ரொம்ப இனிமையாக பழகுகிறார்.... நேற்று மாலை விமான நிலயத்தில் இருந்து தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டார்.

தங்களை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே. FeTNAவில் அப்துல்லாவை நான் சந்திக்க ஏற்பாடு செய்த அண்ணன் பழமைபேசிக்கு எனது நன்றிகள்..

18 comments:

NIZAMUDEEN said...

சுகமான சந்திப்பு;
சுவையான இடுகை!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
NIZAMUDEEN said...
சுகமான சந்திப்பு;
சுவையான இடுகை!
//
நன்றி நிஜாமுதீன்

ச்சின்னப் பையன் said...

ஆஹா.. இதெல்லாம் (பறை) நடந்திருக்கா!!

yogesh said...

//
ச்சின்னப் பையன் said...
ஆஹா.. இதெல்லாம் (பறை) நடந்திருக்கா!!
//
ஆமாங்க... இன்னும் நிறைய மேட்டர் இருக்கு....

வெண்பூ said...

//
மனிதர் ரொம்ப இனிமையாக பழகுகிறார்
//

அவ‌ரைப் ப‌த்தி இதை சொல்லுற‌ ரெண்டு ல‌ட்ச‌த்தி முப்ப‌த்தாராயிர‌த்து எழுநூத்தி நாப்ப‌தாவ‌து ஆளு நீங்க‌.. :)

ஒரு த‌ட‌வை அவ‌ர்ட்ட‌ பேசுனாலே யாருக்கும் இந்த‌ ஃபீல்தான் வ‌ரும்..

yogesh said...

//
வெண்பூ Said...

//
மனிதர் ரொம்ப இனிமையாக பழகுகிறார்
//

அவ‌ரைப் ப‌த்தி இதை சொல்லுற‌ ரெண்டு ல‌ட்ச‌த்தி முப்ப‌த்தாராயிர‌த்து எழுநூத்தி நாப்ப‌தாவ‌து ஆளு நீங்க‌.. :)

ஒரு த‌ட‌வை அவ‌ர்ட்ட‌ பேசுனாலே யாருக்கும் இந்த‌ ஃபீல்தான் வ‌ரும்..
//
ஆமாங்க ஆமாம்...................

பரிசல்காரன் said...

//அவ‌ரைப் ப‌த்தி இதை சொல்லுற‌ ரெண்டு ல‌ட்ச‌த்தி முப்ப‌த்தாராயிர‌த்து எழுநூத்தி நாப்ப‌தாவ‌து ஆளு நீங்க‌.. :)//

அப்துல்லா

நிச்சயமா அடுத்த எலக்‌ஷன்ல நிக்கலாம்ன்னு நெனைக்கறேன்.. (ஆனா எல்லா ஊர் - சாரி -நாடுகள்லேர்ந்தும் ஓட்டுபோட பர்மிஷன் வாங்கிக்கங்க..)

yogesh said...

//
பரிசல்காரன் said...

எல்லா ஊர் - சாரி -நாடுகள்லேர்ந்தும் ஓட்டுபோட பர்மிஷன் வாங்கிக்கங்க..)
//

பரிசல் அண்ணே : எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு வரல.

காவேரி கணேஷ் said...

கொஞ்சம் தேனீர், நிறைய்ய ஆகாயம்..நிகழ்வு தொகுப்பு,புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com/2010/07/blog-post.html

காவேரி கணேஷ் said...

அப்துல்லா,

எங்களுக்கெல்லாம் அருமையான சகோதரர், விழாக்களில் அவருடைய பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும்.

yogesh said...

//
காவேரி கணேஷ் said...
அப்துல்லா,

எங்களுக்கெல்லாம் அருமையான சகோதரர், விழாக்களில் அவருடைய பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும்.

//
ஆமாங்க... விழாவில் நான் நேரிடையாக கண்டேன்...

எம்.எம்.அப்துல்லா said...

அன்பின் அண்ணன் யோகேஷ்,

விடுதி அறையில் இரவு நீங்களும்,நானும்,பழமைபேசியும் நள்ளிரவுவரை வெடித்துச் சிரித்த அரட்டை இன்னும் தித்திக்கின்றது.உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.


//பரிசல் அண்ணே : எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு வரல.

//

அடிங்கொய்யால :))))

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
எம்.எம்.அப்துல்லா said...
அன்பின் அண்ணன் யோகேஷ்,

விடுதி அறையில் இரவு நீங்களும்,நானும்,பழமைபேசியும் நள்ளிரவுவரை வெடித்துச் சிரித்த அரட்டை இன்னும் தித்திக்கின்றது
//

எனக்கும்தான்...

அபி அப்பா said...

அடடா! அப்து தம்பியண்னே, நம்ம யோகேஷ்க்கு குச்சிமிட்டாய் குருவி ரொட்டில்லாம் வாங்கி தத்து கவுத்துபுட்டியலா:-))

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
அபி அப்பா Said...
அடடா! அப்து தம்பியண்னே, நம்ம யோகேஷ்க்கு குச்சிமிட்டாய் குருவி ரொட்டில்லாம் வாங்கி தத்து கவுத்துபுட்டியலா:-))
//

குச்சிமிட்டாய் வாங்கி கொடுத்தாரு ... குருவி ரொட்டி கிடைக்கல ...

இனியா said...

Saw you at FETNA, but could not talk to you!!!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
இனியா Said...
ஸா யூ அத் பேதன, புட் குட் நோட் டாக் தொ யூ!!!

//
அப்படியா.... பரவாயில்லை... மெயில் அனுப்புங்க பேசுவோம்...

உஜிலாதேவி said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment