Wednesday, July 14, 2010

அமெரிக்காவில் ஞாநியுடன் மூன்று நாட்கள்.


எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,பத்திரிக்கையாளர், திரைப்பட,
குறும்பட/ தொலைக்காட்சி தொடர்கள் இயக்குநர், நாடகாசிரியர் (உஸ்...........யப்பா.. கண்ண கட்டுதே...) ஞாநி அவர்கள் ஜூன் 18 முதல் ஜுலை 11 வரை அமெரிக்காவில் பல பகுதிகளில் சுற்று பயணம் மேற்க்கொண்டார். ஜுலை 6,7,8 தேதிகளில் பிலடெல்பியாவில் எம்முடைய விருந்தினராக....

தினமும் இரவு 2 மணி வரை பல விசயங்கள் பேசிக்கொண்டு இருந்தோம்.

மனிதர் ரொம்பவும் எளிமையாக இருக்கிறார். முதல் நாள் அவரை அழைத்து வரும்போது நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று சற்றே படபடப்போடு இருந்தேன். இரவு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் காலையில் நான் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்க "யோகேஷ், காப்பி சாப்பிடலாமா..." என்று திடீர் குரல் கேட்டு எழுந்தேன். கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.

முதல் நாள் அட்லான்டிக் சிட்டியில் உள்ள கேசினோ சென்று வந்தோம். இரவு நேர கார் பயணம் சோம்பலாக இல்லாமல் வெகு அருமையாக இருந்தது அவருடன் பேசிக்கொண்டே செல்கையில்.

மறுநாள் பிலடெல்பியாவில் லங்காஸ்டர் பகுதியில் உள்ள "ஆமிஷ் வில்லேஜ்" சென்றோம்.
(ஆமிஷ் மக்கள், அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விவரங்களுடன் விரைவில் ஒரு பதிவெழுத எண்ணம்.)

நான் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில்...



ஆமிஷ் வில்லேஜ்ல் ஞாநியுடன் நான்...


வரும் வழியில் மதிய உணவை முடித்துக்கொண்டு, பல விசயங்களை பேசிக்கொண்டு வந்தோம்.... பேச்சு பதிவுலகம் பக்கமும் பயணித்தது (ஆதியின் நர்சிம் பேட்டி முதல், மங்களூர் சிவாவின் செந்தழல் ரவிக்கான பதில் பதிவு வரை....)

வழியில் காரில் கடந்த ஒரு பாலத்தை அவரிடம் காட்டி "சார், இதுதான் பெஞ்சமின் பிராங்க்ளின் பாலம்" என்று சொல்ல "அப்படியா, பெஞ்சமின் எனக்கு பிடித்த மனிதர், அவர் ஒரு விசயத்தை கண்டுபிடித்தார், என்னனு சொல்லுங்க பாப்போம்" என்று அவர் என்னை திருப்பி கேக்க, நான் அவரை பார்த்த பார்வையில் அவரே பதிலையும் சொன்னார், மின்னலில் மின்சாரம் இருக்கிற விசயத்தை கண்டுபிடித்தவராம் பெஞ்சமின்.(நமக்கு மின்னலில் கண்டுபிடிக்கப்பட்ட ரீமாசென்ஐ பற்றி கேட்டால் தெரியும். நம்மகிட்ட போயி அந்த மின்னல பத்தி கேட்டா...)

பிலடெல்பியாவில் நடைபெற்ற "பிட்லர் ஆன் தி ரூஃப்" என்ற ஒரு மேடை நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார், டிக்கெட் கிடைக்காததால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

இரவு உணவுக்குப்பின் நாங்கள் இருவரும் உரையாடியதை வீடியோவாக (ஹலோ, ஏன் பேட்டின்னு சொன்னவுடனே பேஸ்தடிச்சி பதிவ மூடிட்டு கிளம்புரீங்க... தொடர்ந்து படிங்க)
பதிவு செய்தேன். விரைவில் உங்கள் பார்வைக்கு.

மூன்றாம் நாள் டிரென்டன் ரயில் நிலையத்தில் நியூயார்க் செல்வதர்க்காக வழியனுப்பி வைத்து விடைப்பெற்றுக்கொண்டேன்.


டிரென்டன் ரயில் நிலைய முகப்பில் ஞாநி....

அவருடனான எனது மூன்று நாட்கள் ஒரு இனிய அனுபவம்......

ஞாநி சார் : நன்றிகள் பல.....

(ஞாநியின் வலைத்தளம் : http://www.gnani.net )

9 comments:

a said...

//
ராம்ஜி_யாஹூ சைட்...
. . .
//
நன்றி ராம்ஜி ...

அபி அப்பா said...

அந்த வலையுலகம் பத்திய பேட்டியயும் போடிருக்கலாம்:-)))

a said...

//
அபி அப்பா Said...
அந்த வலையுலகம் பத்திய பேட்டியயும் போடிருக்கலாம்:-)))
//

என்னா வில்லத்தனம்.

ILA (a) இளா said...

ஹ்ம்ம் அவருடைய பதிவு இன்னும் நிலுவையிலே இருக்கு :( எழுதிடத்தான் ஆசை..

துளசி கோபால் said...

நல்ல எளிய மனிதர்தான்.

பகிர்வுக்கு நன்றி

a said...

//
ILA(@)இளா Said...
ஹ்ம்ம் அவருடைய பதிவு இன்னும் நிலுவையிலே இருக்கு :( எழுதிடத்தான் ஆசை..
//
சீக்கிரம் எழுதுங்க...

a said...

//
துளசி கோபால் Said...
நல்ல எளிய மனிதர்தான்.

பகிர்வுக்கு நன்றி
//
ஆமாங்க : மெய்யாலுமே எளிய மனிதர் நான் பார்த்தவரையில்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.//

நானும் காபி போட உங்க வீட்டுக்கு விருந்தாளியா வரட்டுமா?

a said...

//
நிஜமுடீன் Said...
//கையில் காப்பி கோப்பையுடன் ஞாநி.... அதுமுதல் மூன்று நாட்களும் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்.//

நானும் காபி போட உங்க வீட்டுக்கு விருந்தாளியா வரட்டுமா?
//

தாராளமாக.... வரும்போது மறக்காமல் 1 கிலோ காப்பிதூள் (125 கிராம் சிக்கரி கலந்து) வாங்கிட்டு வந்துடுங்க.

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment