Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, August 29, 2015

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி.


”ஜன்னலுக்கு வெளியே தெரியும் ஆல்ப்ஸ் மலையை பார்த்துக்கொண்டு ஜெனிவாவில் இருப்பதைவிட மின் கம்பங்கள் மீது கால் தூக்கி சிறுநீர் கழிக்கும் நாய்களை பார்த்துக்கொண்டும், ஆட்கள் வந்தால் ஒதுங்கும் மாடுகளையும் ஒதுங்காத மனிதர்களையும் பார்த்துக்கொண்டு சென்னை நகர வீதிகளில் அலையவே பிடித்திருக்கிறது”.


”நான் ஒதுங்கியும் இருக்கவில்லை, ஓய்விலும் இருக்க வில்லை. எனக்கு பிடித்தமான விஷயங்களை,பிடித்தமான மனிதர்களோடு பிடித்தமான வகையில் செய்துகொண்டே இருக்கிறேன்”


இளைஞர்(!) திரு. ”பாரதி மணி” அவர்களின் யதார்த்தம்.

”என்னமா அனுபவித்து வாழுராரு இந்த மனுஷன், ம்ம்ம்ம், நாமலும் இருக்கமே!!!!"  பொறாமையையும் அங்கலாய்ப்பையும் சேர்ந்தே கொண்டுவரும் சம்பவங்கள்,...


நாம் நன்றி சொல்லவேண்டிய இருவர் அவருடைய அக்கா "திருமதி.பகவதி கணபதி" மற்றும் அத்தான் "திரு,கணபதி".
இவர்கள் இருவர் இல்லையென்றால் நமக்கு இந்த புத்தகம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு. பாட்டையாவும் புத்தகத்தை அவர்களுக்கே
சமர்ப்பித்திருக்கிறார்.

“ஆமாம், நான் ஓட்டைக்காலணா... அரையணா பேர்வழிதான்” என்று தனக்கென ஒரு லட்சுமண ரேகையை கிழித்துக்கொண்டு 50 ஆண்டுகால
தில்லி வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ”இரண்டரையணா” வாய்ப்புகளை புறந்தள்ளியதை விவரித்திருக்கும் “Mutton Tallow Import"

சம்பவம் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ( கட்டுரை : நீரா ராடியாவும் நான் தில்லியில் செய்யாத திருகு தாளங்களும்).

நாகர்கோவில்-> தில்லி -> சென்னை : காலச்சக்கரத்திலேறி ஒரு சுற்று வந்த உணர்வு. பார்வதிபுரத்தில் தொடங்கி விருகம்பாக்கத்தில் முடியும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையிலான அனுவங்கள்.


திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் விரதம் முடிக்க சுசீந்திரத்திலுருந்து கிளம்பும் துப்பாக்கி சத்தம் முதல், ”திங்கள் கிழமை சாஸ்திரி விரதம்” வரை எத்தனை கேள்விப்படாத தகவல்களை புத்தமுழுவதும் தெளித்திருக்கிறார். சில கட்டுரைகளில் மையக்கருவை விட துணைத்தகவல்கள் படு சுவாரஸ்யம்.

”ஷேக் ஹஸீனா(பங்களாதேச பிரதமர்), அண்ணா, எம்.ஜி.ஆர் இம்மூவரையும் அவர்கள் பதவிக்கு வந்தபின் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்த்ததில்லை! நேரில் பார்க்கப்போயிருந்தால்,
என்னை அடையாளம் கண்டுகொண்டிருப்பார்களா?”

“தில்லி வந்தால் அவர் என்னையும், பெங்களூர் வந்தால் நான் அவரையும் தவறாது சந்திப்போம். சென்னையில் நிரந்தரமாக தங்கியபிறகு அவரை பார்ப்பது படிப்படியாக குறைந்துபோனது, சினிமா சான்ஸ்க்குக்காக நம்மகிட்ட நெருக்கமா இருக்குறாரோன்னு அவரு நெனச்சிடக்கூடாதில்லையா...

“சுஜாதா... சில நினைவுகள்” கட்டுரையில் வெளிப்படும் மிடில் கிளாஸ் மனப்பான்மை....

படிக்கும்போது நம்மிடையே பல உணர்ச்சி ஓட்டங்களை ஏற்ப்படுத்தும் சம்பவங்கள்.

மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் வேப்பமூடு ஜங்ஷன் மூலம் “புளியமரத்தின் கதை” சுந்தரராமசாமியானது. சு.ராவை சந்தித்து பேச வந்த க.நா.சு. பின்னாளில் தனக்கு மாமனாரானது.
மாமனாருக்கு கெட்டிச்சட்னியுடன் சரவடை வாங்கிவர வடசேரி குண்டுபோத்தி ஓட்டலுக்கு வாடகை சைக்கிளில் சென்றது. பின்னாளில் தான் செய்த மசால்வடையை மாமனார் கேட்டுவாங்கி சாப்பிடுவதை தள்ளி நின்று ரசித்தது. கா.நா.சு. அவர்களோடு பல வருடங்கள் ஒரே வீட்டில் சச்சரவுகள் இன்றி வாழ்ந்தது.... நிகம்போத்காட் இடுகாட்டில் மகனாக க.நா.சு வின் இறுதி சடங்குகளை செய்தது...

”சி.சு.செல்லப்பாவும், மௌனியும் வாய்நிறைய “மாப்பிளே” என்று கூப்பிடுவார்கள். எனது சொந்த மாமனார் ஒருதடவை கூட “மாப்பிளே”ன்னு அழைத்ததில்லை" என்று குறைபட்டுக்கொள்ளும் பாட்டையாவிற்க்கு க.நா.சு தன்னை மகனாகத்தான் நினைத்தார் என்பது
தெரியாமலிருக்க வாய்ப்பில்லை..,

”தில்லியில் நிகம்போத்காட் சுடுகாடு” : இப்புதகத்திலேயே எனக்கு ஆக பிடித்த கட்டுரை.. பாட்டையாவை தெரிந்துகொள்ள இந்த ஒரு கட்டுரைப்போதும்.

தமிழகத்திலிருந்து தில்லி செல்லும் நடிக நடிகைகள், வித்வான்கள்,எழுத்தாளர்கள் செய்யும் அலம்பல்கள் . சிவாஜியின் “பாட்டில்(குழந்தை)” பற்றிய அக்கறையான கேள்வி, எம்.எல்.வி அம்மையார் ஆசைப்பட்ட ”டீச்சர்ஸ் சாய்ஸ்” (காலி)விஸ்கி பாட்டில்....

ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் உடனான சந்திப்பின்போது சந்திரபாபுவால் ஏற்ப்பட்ட குழப்பம்,

இன்னும் பல பல விஷயங்கள்.....

”விமர்சகர் சுப்புடு” - ”நிதர்ஸன சுப்புடு”வாய் அறியபடும் “சுப்புடு சில நினைவுகள்” கட்டுரை. அரங்கேறாத நாடகத்திற்க்கு ”ஸ்டேட்ஸ்மென்” பத்திரிக்கையில் அவர் எழுதிய விமர்சனம்.

“கொஞ்சம் வெற்றிலை சீவல் அப்புறம் சுதா ரகுநாதன் கேசட்”. உங்களை அத்துவானக்காட்டில் கொண்டுவிட்டால் நீங்கள் உங்களோடு எடுத்துச்செல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு சுப்புடு சொல்லிய பதில் என்னை நெகிழவைத்தது என்று பல வருடங்களுக்கு
முன்பு வார இதழ் பேட்டி ஒன்றில் சுதா ரகுநாதன் சுப்புடு அவர்களைப்பற்றி சிலாகித்திருந்தார்.

(சுப்புடு பற்றிய) அதே கேள்வியை பாட்டையாவிடம் கேட்டால் இன்னும் வில்லங்கமான பதில்கள் கிடைத்திருக்ககூடும்.

சத்யநாராயண் சின்ஹாவை 51வது நபராக இந்திராகாந்தியின் மந்திரிசபையில் நுழைக்க முடிந்த சாமர்த்தியம். செம்மீன் திரைப்படத்திற்க்கு தேசியவிருது கிடைக்கச்செய்ய எடுத்த முயற்ச்சிகள், “நண்பா, நண்பா” திரைப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகருக்கான
தேசிய விருதை  தனதாக்க்கிக்கொள்ள 200% வாய்ப்பிருந்தும் அதனை பயன்படுத்தாதது,....

“தன்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுதமுடியாவிட்டாலும், எழுதிய விஷயங்களில் முடிந்தவரை முப்பரிணாமங்களையும் காட்டியிருக்கிறார்.

புத்தகத்தில் குறையாக (எனக்கு) பட்ட விசயம். பிற்பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் சுவாரஸ்யம் குறைவான சில
கடிதங்கள் மற்றும் மதிப்புரைகள்.

பாட்டையா - "Yes. you are a blessed Soul!!!!"

வடசேரி குண்டுபோத்தி ஓட்டலில் தங்களோடு ரசவடை சாப்பிட வேண்டும்..... எப்ப போகலாம்????

*************************************
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

பாரதிமணி

வம்ஸி புக்ஸ்

ISBN # 978-93-84598-06-8

விலை : ரூ. 550.
*************************************


www.vazhippokkann.blogspot.com









Thursday, September 12, 2013

'வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை...


படிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.


ப‌டித்து முடிக்காம‌ல் வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளை முடித்த‌ பிற‌கே புது புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ விர‌த‌த்தை சற்றே த‌ள‌ர்த்த‌ வைத்த‌து மோக‌ன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்க‌வ‌ரி சென்று மோக‌னையும் சுரேகாவையும் பையில் அடைத்த‌பிற‌கும் ம‌ன‌சு அலைபாய‌,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க‌.நா.சுவும்,வ‌ண்ண‌நில‌வ‌னும் இட‌ம் பிடித்துக்கொண்டார்கள்.

வீடு திரும்பியதும் கையில் எடுத்தது "வீடு திரும்பலின்" வெற்றிக்கோடு புத்த‌க‌த்தை. அதைப்ப‌ற்றி கொஞ்ச‌ம்....

புத்தக விபரம் :

வெற்றிக்கோடு
'வீடு திரும்பல்' மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.

 
85 ப‌க்க‌ங்க‌ள் (முன்னுரை ம‌ற்றும் முடிவுரை த‌விர்த்து). 19 க‌ட்டுரைக‌ள். ச‌ட்டென்று ஆர‌ம்பித்து ச‌டுதியில் முடியும் எழுத்து ந‌டை.

"உன‌க்கு புத்திம‌தி சொல்லுற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ அப்பாட‌க்கர் இல்லை, என‌க்கு ந‌ட‌ந்த‌தை,நான் பின்ப‌ற்றுவ‌தை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்ட‌மிருந்தா ப‌டி, இல்லாட்டி போயி புள்ள‌குட்டிக‌ள‌ ப‌டிக்க‌ வை" என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோக‌னின் மைண்ட் வாய்ஸ் : நாங்க‌ள்ளாம் எவ்வ‌ள‌வு பாத்திருக்கோம்!!!!!!!)

பெரும்பாலான க‌ட்டுரைகள் ந‌ம்முடைய‌ வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்க‌ட்டிக்கொண்டு ப‌ட‌ம்பிடித்தது போல‌ இய‌ல்பாய்...

வெள்ளிக்கிழ‌மை போட்டுக்கிற‌ ச‌ட்டையை ( வியாழ‌க்கிமை மழை வ‌ந்துட்டா என்ன‌ ப‌ண்ணுற‌து??) புத‌ன்கிழ‌மையே சுவைச்சி ரெடி ப‌ண்ணி வைக்கிற‌ முன் ஜாக்கிற‌தை முத்த‌ண்ணா பார்ட்டி நான், சில‌ கட்டுரைகளை படிக்கையில் சிரிப்ப‌தை த‌விர்க்க‌ முடிவ‌தில்லை.

 புத்த‌க‌த்தில் பிடித்த‌ சில‌ ப‌குதிக‌ள் :

 "உங்க‌ள் வாழ்க்கையின் சில‌ ப‌குதிக‌ளை நீங்க‌ள் திரும்பி பார்க்க‌வும், உங்க‌ள் வாழ்க்கைக்கு தேவையான‌ ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் க‌ற்றுத்த‌ர‌வும் செய்யுமானால் இந்த‌ புத்த‌க‌ம் த‌ன் க‌ட‌மையை செய்துவிட்ட‌து என்று அர்த்த‌ம்".

"முத‌லில் ஒருவர் செய்த‌ க‌ண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றிய‌வர் முத‌லாம் நப‌ரைவிட‌ அதிக‌ பிர‌ப‌ல‌ம் ஆன‌து ந‌ட‌ந்துதான் உள்ள‌து".

படிக்கையில் ச‌த்துண‌வு திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திய‌ காம‌ராஜ‌ரும், அத‌னை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்திய‌ எம்.ஜி.யாரும் நினைவுக்கு வ‌ருகிறார்க‌ள்.

"முக்கிய‌ பொருள்க‌ளை எப்போதும் குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைப்ப‌தும் அங்கிருந்து தேவையான‌ போது உட‌னே எடுப்ப‌தும் மிக‌ச்சிறிய‌, ஆனால் ந‌ம் நேர‌த்தை நிறைய‌ சேமிக்கிற‌ விஷ‌ய‌ம்".

நான் சிர‌த்தையுட‌ன் க‌டைபிடிக்கும் விஷ‌ய‌ம் இது. 'பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்'  அலுவ‌க‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌,வீட்டுக்கும் சேர்த்துதான்.

நிறைமாத கர்ப்பிணி‍‍‍‍‍‍‍‍‍‍ போல‌ எப்போதும் காட்சிய‌ளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்த‌து எப்போது???

"மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)" "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?

"வெற்றி பெற‌,முன்னேற‌,ம‌கிழ்ச்சி கொள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் உரிமை உண்டு.அது ந‌ம‌க்கு ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து மூட‌த்த‌ன‌ம்.வாழ்க்கையும், வாய்ப்புக‌ளும் அனைவ‌ருக்கும் போது."

"உங்க‌ள் குடும்ப‌த்தார் வ‌லி,க‌ண்ணீர் உண‌ராது நீங்க‌ள் இம‌ய‌மே தொட்டாலும் அதில் எந்த‌ ப‌ய‌னுமில்லை."

"க‌ட‌வுளாலும் முடியாத‌ விஷ‌ய‌ம் ஒன்று உண்டு. ந‌டந்ததை மாற்ற அவராலும் முடியாது! "

சில சிறு குறைகள் :

செல்ல‌ அம்மாவிற்க்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

"பதிவு" என்ற வார்த்தையை "கட்டுரை" என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.

ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.

*************************************************************
 நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.

சக பதிவராக‌, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது...

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே....

*************************************************************

"வெற்றிக்கோடு" - செட்டியார்கடை  தேன்மிட்டாய்.

*************************************************************


Sunday, December 9, 2012

ந.கொ.ப.கா

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"...

"லொல்லு தாதா பராக்" போலவே மற்றுமொரு படம் என்றளவில் நினைக்கப்பட்டிருந்த எண்ணத்தை படத்தை பற்றி கேட்ட/படித்த விமர்சனங்களும் மாற்றியுள்ளது...

இசை வெளியீட்டில் கமல் கலந்து கொண்டபோது "கட்டாயத்தின் பேரில் கமல் கலந்து கொண்டிருப்பார் போலும்" என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு(?) இயக்குனர் பாலாஜி தரணிதரன் சந்தோஷ அதிர்வை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...


******************************************************

சரியாய் மூன்று வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகருக்கு அருகில் நார்த் வேல்ஸ் கவுண்டியில்

உள்ள டென்னிஸ் மைதானத்தில் லைட் வெளிச்சம் சற்றே கம்மியாக தெரியும் மூன்றாம் கோர்ட்டின் வலப்பக்கம் நான் மற்றும் நண்பர் பழனி. இடப்பக்கம் நண்பர்கள் விவேக் மற்றும் சிவா.


வழக்கம் போல நமது ஆட்டத்திறனை(?) வெளிப்படுத்திக்கொண்டிருந்த எங்களுக்கு வந்தது ஒரு சோதனை(???)....


வாட்டமாய் வந்த பந்தை எதிர்புற‌ம் திருப்ப, திருப்பி அடிக்கும் அவசரத்தில் விவேக்கும் சிவாவும் பக்கவாட்டிலிருந்து ஓடிவந்து ஒருவர் தோள் ஒருவர் இடித்துக்கொள்ள.....

"டென்னிஸ் விளையாடிக்கிட்டு இருந்தோம்... யோகேஷ் அடிச்சாரு.... திருப்பி அடிக்க‌ற‌த்துக்கு வேக‌மா ஓடி வ‌ந்தனா? ம‌று ப‌க்க‌த்தில‌ருந்து சிவாவும் ஓடி வ‌ந்தானா? ரெண்டுபேரும் வேக‌மா மோதிக்கிட்டோமா... நா கீழவிழுந்திட்டேனா....... வ‌ல‌க்கை ம‌ணிக்க‌ட்டுல‌ அடிப‌ட்டுடிச்சி...... ரெண்டு வாரத்துல‌ சரியாயிடும்....." ராத்திரி சாப்பாட்டை கொண்டுவ‌ந்த ராக‌வ‌னிட‌ம் மான்ட்கொமரி ஆஸ்பிடல் பெட்டில் ஒருக்களித்து படுத்தபடி சொல்லிக்கொண்டிருந்தார் விவேக்....


விபத்துக்கு காரணகர்தாவாகிய(பந்தை நீதான் அடித்த என்று நானும், இல்ல நீதான் என்று பழனியும் ஒருவரை ஒருவர் இன்றுவரை சண்டையிட்டுக்கொள்வதுண்டு...) எங்கள் மூவர் குழு, விவேக்கின் கை சரியாகும் வரை அவரை கவனித்துக் கொள்வதாய் முடிவு செய்து, ஒரு வாரம் அக்ரிமென்ட்படி சரியாய் கவனித்துக்கொண்டு,பின்னர்பழனியின் வீட்டில் விவேக்கை விட்டுவிட்டு (தலையில் கட்டிவிட்டு!..) நானும் சிவாவும் எஸ்ஸாகிவிட‌ அடுத்த‌ மூணு வார‌த்துக்கு விவேக்கிர்க்கு நர்ஸ் வேலை பார்த்து எங்க‌ள் மேல் கொலை வெறியோடு அலைந்தார்....

சம்ப‌‌வம்(?) ந‌ட‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விவேக்கின் ம‌னைவி க‌ர்ப்ப‌வ‌தி... பிர‌ச‌வ‌த்திற்க்காக‌ இந்தியா சென்றிருந்த‌வ‌ரிட‌ம் அடிப‌ட்ட‌ விச‌ய‌ம் தெரியாம‌ல் மெயிட்டெயின் ப‌ண்ணுவ‌த‌ற்க்கு விவேக் ப‌ட்ட‌ அவ‌ஸ்தை இருக்குதே....... இப்ப‌ நென‌ச்சாலும் சிப்பு சிப்பா வ‌ருது....

******************************************************

நேற்றிர‌வு "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" ப‌ட‌ம் பார்கையில் விவேக்கை வைத்து நாங்க‌ள் பண்ணுன‌ காமெடியெல்லாம் ஞாபகம் வரவே, மேற்கண்ட கொசுவத்தி சுருள்...

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...


தனது நண்பரின் கதையை அவரையே கேமராமேனாக வைத்து படம் எடுத்தது... நண்பனின் பெயரையே ( இனிசியல் உள்பட) ஷீரோவுக்கு வைத்தது... ப‌ட‌த்தின் இறுதியில் த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளை ப‌ற்றியும், அவ‌ர்க‌ளின் ல‌ட்சிய‌ங்க‌ள் ப‌ற்றியும் விவரித்தது.... ந‌டுத்த‌ர‌ குடும்ப‌த்து வாழ்க்கையை மிகையில்லாம‌ல் காட்சிப‌டுத்திய‌து...வ‌ச‌ன‌ங்க‌ளில் எதார்த்த‌த்தை பிர‌திப‌லித்த‌து... {{ந‌ண்ப‌னின் பிர‌ச்சினைக்கு அடுத்த‌வ‌ரை குற்ற‌ம் சொல்லாம‌ல், "என்னாலாதான் இப்ப‌டி ஆயிடுச்சி" என்று ஒவ்வொருவ‌ரும் த‌ன்னைத்தானே குறை சொல்லிக்கொள்வ‌தாக‌ட்டும்.}} .இருக்கிற‌ குழப்ப‌தையெல்லாம் தாண்டி ஹீரோவின் திரும‌ண‌ம் ந‌ட‌க்க‌வேண்டுமே என்ற‌ ப‌ட‌ப‌ட‌ப்பை ஹீரோவின் மூன்று ந‌ண்பர்க‌ளோடு சேர்த்து நம்மையும் அனுப‌விக்கவைக்கிற‌ லாவ‌க‌மாகட்டும்....ஒவ்வோன்றிலும் வ‌சீக‌ரிக்கிறார் பாலாஜி...


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" -

"ந‌டுவுல‌ ந‌டுவுல‌ இந்த‌ மாதிரி ப‌ட‌ங்க‌ளும் எடுங்க‌ப்பா!" என்று கோட‌ம்பாக்க‌ம் நோக்கி கோட‌ங்கி சொல்கிற‌ பட‌ம்...