Wednesday, August 18, 2010

வருத்தப்படாத வாலிபால் சங்கம்(ஸ்தாபிதம்:மார்ச்-2008)


2008 ல் ஆரம்பித்த ஒரு விசயம் நேற்று வரை தொடர்கிறது.....

என்னதான் நடந்துச்சின்னு நீங்களே படிங்களேன்....

2008 மார்ச் மாசத்துல ஒருநாள் ஆஃபீஸ்ல வாலி பால் லீக் மாட்ச் நடக்கப்போவுதுன்னு மெயில் அனுப்புனாங்க. ஊருல ஸ்கூல் / காலேஜ் டைமுல விளையாடி இருக்கறததுனால நானும் ஒரு டீம் ரிஜிஸ்டர் பண்ணிட்டேன். டீம் பேரு v.v.s ( "வருத்தப்படாத வாலிபால் சங்கம்")

டீம் ரிஜிஸ்டர் பண்ணியாச்சி, இப்ப டீமுக்கு ஆளு சேக்கணுமே... ஒரு வழியா ஆஃபீஸ்ல ஒரு மூணு பசங்கள தேத்தித்டேன்.(கோவை ப்ரதர்ஸ் படத்துல சத்தியராஜூம் வடிவேலும் கிரிக்கெட் விளயாட ஆள் புடிப்பாங்களே, அந்த மாதிரி....)

அடுத்ததா ஒரு பிரச்சினை, மேட்ச் ரூல்படி ஆறு பேருல ரெண்டு லேடீஸ் பிளேயர் கண்டிப்பா இருக்கணும். ஒரு வழியா இன்னொரு டீம்ல உள்ள ஒரு வெள்ளக்கார புள்ளைய கரெக்ட் பண்ணி, அந்த புள்ள வழியா அதோட கேர்ல் ஃபிரண்ட கரெக்ட் பண்ணி ( என்னமோ அவனோட கேர்ல் ஃபிரண்ட் மாதிரி சொல்லுரானேன்னு நீங்க நினைப்பீங்க,சும்மா எழுதும்போதாவது இப்படி எழுதி மனசதேத்திக்கலாம்ணுதான்) ஆறு பேர் ரெடீ பண்ணிட்டேன்.

அப்பாடா.... ஒரு வழியா எல்லாம் முடிஞ்சிது, களத்துல எறங்க வேண்டியதுதான் பாக்கின்னு நினச்சிக்கிட்டு இருக்கும்போது டீம் என்ரோல்மென்ட் பீஸ் 400$ கட்ட சொல்லி மெயில். ( 400$ பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா அந்த ஏரியா பக்கமே எட்டி பாத்துருக்க மாட்டேன்....) . அந்த ரெண்டு வெள்ளக்கார புள்ளங்க கிட்ட பங்கு கேட்டா "உங்க கூட விளயாடுரதே அதிகம்.. இதுல பங்கு காசு வேற கொடுக்கன்னுமான்னு கோச்சிகிட்டு கா விட்டுருவாங்கலோண்ணு பயம். ஒருவழியா 400$ல பசங்க நாலு பேரு மட்டும் பங்கு போட்டு கட்டுனோம். பணத்த கட்டிட்டு நாங்க நாலு பேரும் ஆளு வச்சி அழுது தீர்த்ததுதனிகதை.

ஒரு நல்ல நாளா பாத்து (நம்ம ஊருன்னா பஞ்சாங்கம் பாக்கலாம், இது அமெரிக்கா இல்ல அதனால வெதர் ரிபோர்ட்.) மாட்ச் ஆரம்பிச்சாங்க. அப்படி இப்படி ன்னு விளையாடி 24 லீக் கேம்ல 19 கேம் . பண்ணி Rank-1 வந்துட்டோம் .

லீக் மாட்சில win பண்ணி அடுத்த லெவெல்க்கு போனா பாடிகாட் முனீஸ்வரருக்கு பதினொரு தேங்கா உடைக்கறதா வேண்டி இருந்தேன். லீவுக்கு இந்தியா வரும்போது முதல் வேலையா அத நிறைவேத்தனும்.

ஒரு வழியா Semi-finals ம் Win பண்ணி Final மாட்ச்க்கு ஸெலெக்ட் ஆகிட்டோம். நிறைஞ்ச அமாவாசை அன்னைக்கி Final மாட்ச் நடந்துச்சு. அமெரிக்கால இருக்குறவனுக்கு அமாவாசைய பத்தி எப்படி தெரியும்னு நினைக்காதீங்க. வீட்டுல தமிழ் மாச காலண்டர் வச்சிருக்கோமுல்ல.

Final மாட்ச்ல நமக்கு கிரகம் சரியில்ல, அதனால “Runner-Up.” தான் கிடைச்சிது. “Runner-Up”னா சும்மாவா, வெற்றி கனியை தொட்டு பாத்துட்டு வந்துருக்கொமிலான்னு சவுண்ட குடுத்துக்கிட்டு திரிஞ்சோம். அப்படியே 2009 மேட்ச்ம் நடந்தது, அதுலயும் "Runner-Up".

2010க்கான league மாட்ச் ஏப்ரல்ல ஆரம்பிச்சி நேத்து முடிஞ்சிது, வழக்கம்போல final மாட்சில "Runner-Up".

ம்ம்ம்….. மூணு வருசமா “Runner-Up” டைடீல் வாங்கினததுனால இந்த உலகம் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு………..

இன்னும் எத்தனை நாளைக்குதான் விளையாட தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது……..

8 comments:

எம்.எம்.அப்துல்லா said...

அட்றா!அட்றா!அட்றா!

:))

ஜோதிஜி said...

இன்னும் எத்தனை நாளைக்குதான் விளையாட தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது……..

நானும் விளையாட்டுகளில் உங்க கட்சி தான்.

அபி அப்பா said...

மாப்ள! ரொம்ப ரொம்ப நல்லா அழகா எழுதியிருக்க. சூப்பர்.ஊருக்கு வா. சும்மா உன்னைய தூக்கி தட்டாமாலை சுத்தி கொண்டாடுறேன்,(அப்து, இந்த இடத்திலே சிரிக்க கூடாது, ஒரு ஃபுலோவிலே சொல்றது தான்).

மாப்ளக்கி வாலிபால் விளையாட தெரியும்னு சொல்லி பொண்ணு பார்க்க வேண்டியது தான் பாக்கி, செஞ்சிடுவோம்:-)))

Anonymous said...

//அப்து, இந்த இடத்திலே சிரிக்க கூடாது, ஒரு ஃபுலோவிலே சொல்றது தான்

//

இஃகிஃகிஃகிஃகி

அப்துல்லா

a said...

அபி அப்பா :
//
அப்து, இந்த இடத்திலே சிரிக்க கூடாது, ஒரு ஃபுலோவிலே சொல்றது தான்
//
சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த கதயா, சும்மா கடக்குள்ளார வந்து கமெண்ட் போட்டுட்டு போன அப்துல்லா அண்ணனை சிரிக்க வச்சிட்டீங்க.... சந்தோசமா............

a said...

ஜோதிஜி:
//
நானும் விளையாட்டுகளில் உங்க கட்சி தான்.
//

அப்படியா............ காவல் விடுங்க.... நாமல்லாம் நல்லா விளயாட ஆரம்பிச்ச பூமி தாங்காது...

a said...

அப்து அண்ணே : வருகைக்கும் சிறப்பு சிரிப்புக்கும் நன்றி....

Anonymous said...

Nice one.

-Santhosh

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment