"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"...
"லொல்லு தாதா பராக்" போலவே மற்றுமொரு படம் என்றளவில் நினைக்கப்பட்டிருந்த எண்ணத்தை படத்தை பற்றி கேட்ட/படித்த விமர்சனங்களும் மாற்றியுள்ளது...
இசை வெளியீட்டில் கமல் கலந்து கொண்டபோது "கட்டாயத்தின் பேரில் கமல் கலந்து கொண்டிருப்பார் போலும்" என்றே நினைத்துக்கொண்டிருந்த நமக்கு(?) இயக்குனர் பாலாஜி தரணிதரன் சந்தோஷ அதிர்வை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்...
******************************************************
சரியாய் மூன்று வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகருக்கு அருகில் நார்த் வேல்ஸ் கவுண்டியில்
உள்ள டென்னிஸ் மைதானத்தில் லைட் வெளிச்சம் சற்றே கம்மியாக தெரியும் மூன்றாம் கோர்ட்டின் வலப்பக்கம் நான் மற்றும் நண்பர் பழனி. இடப்பக்கம் நண்பர்கள் விவேக் மற்றும் சிவா.
வழக்கம் போல நமது ஆட்டத்திறனை(?) வெளிப்படுத்திக்கொண்டிருந்த எங்களுக்கு வந்தது ஒரு சோதனை(???)....
வாட்டமாய் வந்த பந்தை எதிர்புறம் திருப்ப, திருப்பி அடிக்கும் அவசரத்தில் விவேக்கும் சிவாவும் பக்கவாட்டிலிருந்து ஓடிவந்து ஒருவர் தோள் ஒருவர் இடித்துக்கொள்ள.....
"டென்னிஸ் விளையாடிக்கிட்டு இருந்தோம்... யோகேஷ் அடிச்சாரு.... திருப்பி அடிக்கறத்துக்கு வேகமா ஓடி வந்தனா? மறு பக்கத்திலருந்து சிவாவும் ஓடி வந்தானா? ரெண்டுபேரும் வேகமா மோதிக்கிட்டோமா... நா கீழவிழுந்திட்டேனா....... வலக்கை மணிக்கட்டுல அடிபட்டுடிச்சி...... ரெண்டு வாரத்துல சரியாயிடும்....." ராத்திரி சாப்பாட்டை கொண்டுவந்த ராகவனிடம் மான்ட்கொமரி ஆஸ்பிடல் பெட்டில் ஒருக்களித்து படுத்தபடி சொல்லிக்கொண்டிருந்தார் விவேக்....
விபத்துக்கு காரணகர்தாவாகிய(பந்தை நீதான் அடித்த என்று நானும், இல்ல நீதான் என்று பழனியும் ஒருவரை ஒருவர் இன்றுவரை சண்டையிட்டுக்கொள்வதுண்டு...) எங்கள் மூவர் குழு, விவேக்கின் கை சரியாகும் வரை அவரை கவனித்துக் கொள்வதாய் முடிவு செய்து, ஒரு வாரம் அக்ரிமென்ட்படி சரியாய் கவனித்துக்கொண்டு,பின்னர்பழனியின் வீட்டில் விவேக்கை விட்டுவிட்டு (தலையில் கட்டிவிட்டு!..) நானும் சிவாவும் எஸ்ஸாகிவிட அடுத்த மூணு வாரத்துக்கு விவேக்கிர்க்கு நர்ஸ் வேலை பார்த்து எங்கள் மேல் கொலை வெறியோடு அலைந்தார்....
சம்பவம்(?) நடந்த சமயம் விவேக்கின் மனைவி கர்ப்பவதி... பிரசவத்திற்க்காக இந்தியா சென்றிருந்தவரிடம் அடிபட்ட விசயம் தெரியாமல் மெயிட்டெயின் பண்ணுவதற்க்கு விவேக் பட்ட அவஸ்தை இருக்குதே....... இப்ப நெனச்சாலும் சிப்பு சிப்பா வருது....

நேற்றிரவு "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படம் பார்கையில் விவேக்கை வைத்து நாங்கள் பண்ணுன காமெடியெல்லாம் ஞாபகம் வரவே, மேற்கண்ட கொசுவத்தி சுருள்...
படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்...
தனது நண்பரின் கதையை அவரையே கேமராமேனாக வைத்து படம் எடுத்தது... நண்பனின் பெயரையே ( இனிசியல் உள்பட) ஷீரோவுக்கு வைத்தது... படத்தின் இறுதியில் தன் நண்பர்களை பற்றியும், அவர்களின் லட்சியங்கள் பற்றியும் விவரித்தது.... நடுத்தர குடும்பத்து வாழ்க்கையை மிகையில்லாமல் காட்சிபடுத்தியது...வசனங்களில் எதார்த்தத்தை பிரதிபலித்தது... {{நண்பனின் பிரச்சினைக்கு அடுத்தவரை குற்றம் சொல்லாமல், "என்னாலாதான் இப்படி ஆயிடுச்சி" என்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே குறை சொல்லிக்கொள்வதாகட்டும்.}} .இருக்கிற குழப்பதையெல்லாம் தாண்டி ஹீரோவின் திருமணம் நடக்கவேண்டுமே என்ற படபடப்பை ஹீரோவின் மூன்று நண்பர்களோடு சேர்த்து நம்மையும் அனுபவிக்கவைக்கிற லாவகமாகட்டும்....ஒவ்வோன்றிலும் வசீகரிக்கிறார் பாலாஜி...
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" -
"நடுவுல நடுவுல இந்த மாதிரி படங்களும் எடுங்கப்பா!" என்று கோடம்பாக்கம் நோக்கி கோடங்கி சொல்கிற படம்...

0 comments:
Post a Comment