Wednesday, May 4, 2011

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்....

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா....

”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்டிங்ண்ணே......” அப்துல்லா போனில் வழி சொல்கயில் வேக வேகமாய் தலையாட்டிய நான் மிகச்சரியாக வழியை தவறவிட்டு, அரங்கத்தின் பெயரை (ஆத்தாடி..... நாக்கு எவ்ளோ ரோலிங் ஆவுது...),, சொல்லி வழிகேட்டு மீண்டு(ம்) வருவதற்க்குள் மதன் பாதி பேச்சில் இருந்தார்....

அரங்கு நிறைந்த கூட்டம்.... டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) இருந்த இடமாய் பார்த்து ஒதுங்கி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கயில் “தனக்கு பின்னால் பேச இருப்பவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பிரச்சினை வந்துவிடாமல்” தனது பேச்சை விரைவாக முடித்துக் கொள்வதாக பத்து நிமிடமாக சொல்லிக்கொண்டிருந்தார் மதன் .

உயிர்மை பதிப்பக சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ”உயிர்மை” மாத இதை புரட்டிப்பார்க்கிறேன் பேர்வழி என்று படித்து முடிக்கையில் மதனும் பேச்சை முடித்திருந்தார். அடுத்து பேச இருந்தவங்களுக்கு கொஞ்சம் நேரம் மிச்சம், எனக்கு இருபது ரூபாய் மிச்சம் (”உயிர்மை” மாத இதழ் விலை இருபது ரூபாயாம்).

அடுத்து பேச (தனது இருக்கைக்கு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை உஷாராய் கையோடு எடுத்துக்கொண்டு)வந்த சாரு மைக் பிடித்தார். புத்தக கண்காட்சியில் அவரோட தண்ணீர் பாட்டிலை யாரோ ஆட்டய போட்டத பத்தி ரொம்ம வருத்தப்பட்டு அவரோட பிளாக்ல எழுதி இருந்ததை ”இந்த நேரத்திலே எண்ணிப்பார்க்கிறேன்...” (அய்யய்யோ நமக்கும் ஒட்டிக்கிச்சே....)

இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

சாரு வழக்கம் போல லத்தீன் அமெரிக்க அறிவாளிகளையும் , மலையாளத்து மைனர்களையும் பேச்சில் இழுத்து, பேச்சை இழுத்துக்கொண்டிருக்கயில் சற்றே பார்வையை திருப்பி மேடையை ஒரு அரை வட்டம் சுற்றினேன்.


இடமிருந்து வலமாய்.... சுஜாதாவின் (வெகு நாட்களுக்குப்பிறகு திருமணத்திற்க்கு சம்மதித்த)மூத்த மகன், சாந்தமாய் அமர்ந்திருந்த சுஜாதா(அவருக்குப்பின்னால் இருந்த பேனரில் அதைவிட சாந்தமாய் சுஜாதாவின் முகம்.....)ஆர்மி ஆபீசர் தோரணயில் ஜோ.டி.குருஸ்,ஞானக்கூத்தன் ஆழ்ந்த யோசனையில் மனுஷ்ய புத்திரன், சற்றே அவஸ்தையாய் இ.பா, மோவாயை இடதுகையில் தாங்கிய எஸ்.ரா, காபி அருந்தியபடி பாரதி கிருஷ்ணகுமார், அருகிலே வண்ணதாசன் ( பாக்கெட்டில் பளபளப்பா என்னது சார்???), அடுத்ததாய் ஸ்ரீநேசன், பக்கமாய் யுவகிருஷ்ணா, இடையில் மதன், இறுதியாய் ஹரிகிருஷ்ணன்,

(அமர்ந்திருந்தவர்கள் பிறகு இடம் மாறியிருந்தாலோ, என்னைப்போல பாதியிலே நடையை கட்டியிருந்தாலோ கம்பெனி பொறுப்பாகாது...)

அப்துல்லா, கேபிள், கே.ஆர்,.பி.செந்தில், விந்தைமனிதன், எறும்பு, ”ழ” ரமேஷ் இவர்களோடு ஒரு மினி சந்திப்பு......

பல்லிடுக்கில் மாட்டியிருந்த வேர்க்கடலையை நாக்கால் நெருடியபடி (மீண்டும்) அலுவலகம் வந்து சேர்கையில் மணி சரியாய் ஒன்பது அம்பத்தி எட்டு. விழாவிற்க்கு சென்றுவருவதற்காக பத்து மணிக்கு மாத்தி வைத்திருந்த மீட்டிங்கை அட்டெண்ட் செய்வதற்காய் அவசர அவசரமாய் இருக்கையை ஆக்கிரமித்து Ctrl+Alt+Del அடிக்கையில் ஏனோ அவரின் முகம் ஞாபகம் வந்தது.....
( Ctrl+Alt+Delன் பயன்பாடு பற்றி நான் முதல் முதலாய் தெரிந்து கொண்டதே
சுஜாதாவின் கட்டுரையில் தான்...)

WE MISS YOU SIR........

2011க்கான சுஜாதா விருது பெற்றவர்கள்:
வண்ணதாசன் : படைப்பு : ”ஒளியிலே தெரிவது” (சிறுகதை)
ஜோ.டி.குருஸ் : படைப்பு : ”கொற்கை” (நாவல்)
அழகிய பெரியவன் : படைப்பு : ”பெருகும் வேட்கை” (கட்டுரை)
ஸ்ரீநேசன்: படைப்பு : ”ஏரிக்கரையில் வசிப்பவன்” (கவிதை)
மு.ஹரிகிருஷ்ணன்: படைப்பு : ”மணல் வீடு” (சிற்றிதழ்)
யுவகிருஷ்ணா : படைப்பு : ”பதிவுகள்” (இணையம்)

14 comments:

ஷர்புதீன் said...

NICE

ILA(@)இளா said...

//டேலிங் ஃபேன் (டேபிள் ஃபேனை சீலிங்கில் மாட்டியிருந்தால் எப்படி சொல்வதாம்???) //
பொளந்துட்டீங்க போங்க.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@ஷர்புதீன் : நன்றி....

எறும்பு said...

உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி.. :)

என். உலகநாதன் said...

நல்லா எழுதியிருக்கீங்க,

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@நன்றி இளா...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@எறும்பு : எனக்கும் தாங்கோவ்...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@என். உலகநாதன் : நன்றி.. “சாமான்யனின் கதையை” படித்துக்கொண்டு இருக்கிறேன்...

அபி அப்பா said...

சுஜாதா விருது பத்தி எழுதும் போது எழுத்து சுஜாதா பாணியிலே வந்திருக்கே மாப்ள! இதையே கண்டின்யூ பண்ணுங்க. அதுத்த தபா அந்த பத்தாயிரம் உங்களுக்கு தான்.இதே போல பதிவை லக்கி எழுதுவாரு, பெஸ்ட் ஆஃப் லக் மாப்ள:-)) ( நல்லா இருந்துச்சு எழுத்து நடை)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@அபி அப்பா : ஏன் இந்த கொல வெறி... நாமலே ஆடிக்கு ஒன்னு அம்மாவாசைக்கு ஒன்னுண்னு போட்டு தொடச்சி வச்சிக்கிட்டு இருக்கோம்.அது உங்களுக்கு புடிக்கலையா????

சி.பி.செந்தில்குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொகுப்புரைப்பதிவில் வித்தியசமான எழுத்துநடை.. நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

>>இணைய விருதுக்காக யுவகிருஷ்ணா தேர்தெடுக்கப்பட்ட விதத்தையும் , அதனால் ஏற்ப்படப்போகும்(?) கான்ட்ரவர்ஸி பத்தியும் சாரு இரண்டுமுறை குறிப்பிட, மேடையின் இடக்கோடி இருக்கையில் இருந்த யுவகிருஷ்ணா நெளிந்ததையும் பார்க்க முடிந்தது...

நிஜமாவே அப்படி நெளிஞ்சாரா? சும்மா கோர்த்து விடறீங்களா? ஹா ஹா

வழிப்போக்கன் - யோகேஷ் said...

@சி.பி.செந்தில்குமார்: ஏங்க... நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு????

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment