Sunday, June 6, 2010

அமெரிக்காவில் Y.G. மகேந்திரா & லக்ஷ்மன் ஸ்ருதி இசைகுழு


Y.G. மகேந்திராவின் "மௌனம் சங்கடம்" என்ற நாடகமும் ,லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சியும் "தமிழ்நாடு அறக்கட்டளை"யின் 35வது மாநில மாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சென்ற வாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்த்தவை சில பதிவாய்.....

தம்பதி சமேதராய் மேடையேறினார் Y.G.மகேந்திரா . எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மேடை ஏறுகிறாராம் திருமதி Y.G.M. நாடகத்தின் பல இடங்களில் Y.G.M யை விட நன்றாக ஸ்கோர் செய்தார் அவரது திருமதி.

நாடகம் முடிந்ததும் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் "அன்பாலயம்" இல்லத்தில் மனநலம் குன்றிய குழந்தைகள் பற்றி தான் நேரில் பார்த்து வந்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

தனது நாடகங்கள் மூலம் வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தார்.

அடுத்ததாக(அறக்கட்டளை நன்கொடையாளர்கள் மற்றும் திறம்பட செயல்பட்டவர்களை கௌரவித்தப்பின்) லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

B.H.அப்துல் ஹமீது தன்னுடை காந்த குரலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ரீமிக்ஸ் பாடல்களை பற்றி தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார்.

தனது தந்தையார் பாடிய பாட்டுக்களை அவர் குரலிலேயே பாடினார் T.M.S.செல்வகுமார். தமிழ் சினிமா உலகம் இவரை கண்டுகொள்ளாதது ஏனோ?

"வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லணும்"ன்னு சொல்லி முதல் பாடல் பாடும்முன் பார்வையாளர்களிடம் பல்பு வாங்கினார் மகதி.

நிகழ்ச்சிக்கு Sound Engineerஆக இருந்த அமெரிக்க இளைஞர் பாவம்,ஒவ்வொரு மைக்குக்கும் Sound track செட் பண்ணுவதற்க்குள் திண்டாடிவிட்டார். அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு இடையே தனியாக மாட்டிக்கொண்ட கடுப்பு வேறு அவருக்கு.

சற்றே ஆயாசமாக அமர்திருந்த பார்வையாளர்களை (நிகழ்ச்சி இரவு 12 மணியையும் தாண்டி நடைபெற்றது) நிமிர்ந்து அமர செய்தது ட்ரம்ஸ் கலைஞரின் ஸோலோ பர்‌ஃபார்மன்ஸ். கடுப்பில் இருந்த Sound engineer கூட தனது கடுப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு ரசித்தார்.

"ஒன்னாம் படியெடுத்து" என்று ஆரம்பித்து விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடலை மாலதி பாடினார். தாளக்கட்டிற்க்கு ஏற்ப சொல் பிறழாமல் இசை குழுவினற்கு ஈடு கொடுத்து அருமையாக பாடினார். பாடல் ஆசிரியரை பற்றி சொல்லும்போது விஜயலக்ஷ்மி நரசிம்மன் என்று அறிவித்தார் B.H.அப்துல் ஹமீது(யானைக்கும் அடி சறுக்கும்?).

பாடகர் கிருஷிடம் சங்கீதா பற்றிய விசாரிப்புகளே அதிகமாக இருந்தது. என் பங்கிற்கு நானும் விசாரித்தேன். சங்கீதாவை அழைத்து வரவில்லையா என்று நான் கேட்டதற்கு இல்லை பாஸ் என்றார். ஒருவேளை வீட்டுல விசேசமா இருக்குமோ? சென்னை வாழ் பதிவர்கள் விசாரித்து சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பாடலுக்கு Y.G.மகேந்திரா தபேலா வாசித்தார்.குறை ஒன்றும் சொல்வதர்க்கு இல்லை.
(இவர் தபேலா வாசித்து பார்த்த முதல் நிகழ்ச்சி விஜய் டீவியில் "வாங்க பேசலாம்". விஜய் டீவியின் நிகழ்ச்சிகளை அட்சரம் பிசகாமல் காப்பி அடிக்கும் சன்,கலைஞர்,ஜெயா டீவியில் "Y.Gயும் தபேலாவும்" என்ற ஒரு புது நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வரலாம்)

விகடன் குழுமத்தில் அவ்வப்போது எழுதும் பிரகாஷ் எம் ஸ்வாமி அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

B.H.அப்துல் ஹமீது அவர்களிடம் கேட்க நினைத்து சந்தர்ப்பம் அமையாமல் போன கேள்வி.

"சார், தற்போதைய தமிழ் பாடல்களில் வரும் மேற்கத்திய ஒலிக்கூறுகள் அமையப்பெற்ற பாடல் வரிகளை தங்களுடைய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்காக எப்படி ஞாபகம் வைத்துக்கொள்கிறீர்கள்?"

உங்களில் யாருக்காவது அவரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் இந்த கேள்வியை என் சார்பாக கேட்கவும்.

பி.கு : அமெரிக்க வாழ் பதிவர்கள்/ வாசகர்கள் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்

7 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தொகுத்தளிமைக்கு மிக்க நன்றிகள் யோகேஷ்..!

இது போன்ற தமிழகம் தொடர்பான சம்பவங்கள், நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்..!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

@@உண்மைத்தமிழன் அண்ணே,

மிக்க நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
{தமிழ் பதிவுலக வரலாற்றில் எனது பதிவுக்கு [இதையும் ஒரு பதிவாக மதித்து] முதன் முதலாக
பின்னூட்டம் இட்டு வரலாற்று சிறப்புமிற்க்க நிகழ்வை நிகழ்த்தியுள்ள அண்ணனுக்கு வந்தனங்கள் }

{என்னையும் ஒரு பதிவராக(???) மதித்து தங்களை "பின்தொடர்பவராக" இணைத்து கொண்டமைக்கு என்னுடைய நன்றிகள்.}

சி. கருணாகரசு said...

நல்ல கோர்வையான தொகுப்பு...அழகிய தமிழ் நடை.
பகிர்வுக்கு நன்றி.

அந்த...Word verification எடுத்து விடுங்க கருத்துரை எழுதி அனுப்ப சிறமமா இருக்கு.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

@@ கருணாகரசு நண்பருக்கு நன்றிகள்...

Word verification யை நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி!!!

வெறும்பய said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..

என்றும் உங்களை பின்தொடர்பவனாய் நான் இருப்பேன். பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

@@வெறும்பய( பேரு வைக்கரதுல என்னா வில்லத்தனம், அப்பதான சக பதிவர்கள் என்னை மரியாதை குறைவாக குறிப்பிடுகிறார்கள் என்று ஒரு பதிவ போடலாம்..[ சும்மா... பிம்‌பிலிக்கீ பிலேப்பி]....) அவர்களுக்கு நன்றிகள்...

பின்தொடர முடிவு செய்து இருப்பதர்க்கு மற்றுமொரு நன்றி.

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...
This comment has been removed by the author.
:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment