Saturday, October 30, 2010

சார் போஸ்ட்.............


"என்னப்பா சமீபமா பதிவையே காணும்?" - அமெரிக்க வாழ் பதிவர் ஒருவர் மின்னஞ்சலில் கேட்டது.

"யோகேஷ்......... ஏங்க என்னாச்சி... கட ரொம்ப நாளா மூடி கிடக்கு" - ஐரோப்பிய நாடுகளில் அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தாலும் வாரமிருமுறை தவறாமல் அலைபேசும் பதிவர் கேட்டது...

"யோவ்... எதாவது பதிவ போடுய்யா... அதவச்சி எதிர்பதிவ போட்டு கொஞ்ச நாளைக்கு பொழப்ப ஓட்டுவோம்....." - சென்னையிலிருக்கும் நலம்விரும்பி ஒருவர் சாட்டில் சொன்னது....

........
இப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலங்க............. நடக்காதுன்ணும் தெரியும்.....
-------
போஸ்ட் போட்டு ரொம்ப நாளாச்சேன்னு (அடிக்கடி போட்டுட்டாலும்.....) போஸ்டயே போஸ்ட் ஆக்கிறலாம்ன்ணு ஐடியா பண்ணி அதுக்கான கோதாவுல எறங்கி........... ஸ்ஸ்........ யப்பா..............
மீதிய நீங்களே படிங்க........... இல்ல இல்ல பாருங்க....




அஞ்சல் அலுவலகம்.






அஞ்சல் அலுவலக வாசலில் தனியார் சேவைக்கான பெட்டி.





தபால் பட்டுவாடாவிற்க்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள்.





எங்கள் அடுக்ககதிற்க்கு தபால் கொண்டு வரும் தபால்காரர்.

இவரை தினமும் பார்ப்பதுண்டு.... சிநேக புன்னகையில் ஆரம்பித்து தமிழின் சில கெட்ட வார்த்தைகளை சொல்லித்தரும் அளவுக்கு பழக்கம்.....
36 வருசமாக இப்பணியில் இருக்கிறார்.... நான் பார்த்தவரையில் தன்னுடைய வேலையை அனுபவித்து செய்பவர்....









வீடுகளின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் தபால்பெட்டி....

( தபால்பெட்டியை பற்றி நினைக்கும்போதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி படித்த பாக்கியம் ராமசாமியின் ஜோக் ஒன்ணு எனக்கு ஞாபகத்துக்கு வரும்.. உங்களுக்கு அந்த ஜோக் தெரியுமா???)

தபால்காரரிடம் ஒரு மாஸ்டர் கீ இருக்கும். தன் வாகனத்தில் இருந்தபடியே தபால்களை இப்பெட்டியில் போட்டுவிடுவார்...




அடுக்ககங்களில் இதுபோல் இருக்கும்.

எனக்கு தெரிந்தவரை அமெரிக்காவில் இருக்கும் வாகனங்களில் வலப்புறம் ஸ்டீயரிங் உள்ளவை இரண்டு....
1) பயணிகள் பயன்பாட்டிற்க்கான பேருந்துகள்.
2) தபால் பட்டுவாடா செய்வதற்கான வாகனங்கள்.

வேறு ஏதாவது வாகனங்கள் இப்பட்டியலில் உண்டா??? தெரிஞ்சால் சொல்லுங்களேன்....

35 comments:

ஞாஞளஙலாழன் said...

Really impressing!

வலப்பக்க ஸ்டியரிங்-ஐ வலைப் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி

a said...

@ஞாஞளஙலாழன் : நன்றி...
உங்க பேரை சொல்லி பார்த்தேன்.......... வாய் வலிக்கிது.....

சிவராம்குமார் said...

போஸ்ட வெச்சு ஒரு போஸ்டா :-)

சி.பி.செந்தில்குமார் said...

அட இந்த ஐடியா எனக்கு வர்லையே?

சி.பி.செந்தில்குமார் said...

போஸ்ட்போன் பண்ணிடாதீங்க (POSTPONE) பதிவு போடறதை

ஜோதிஜி said...

உங்களின் ஒவ்வொரு தலைப்பையும் குழந்தைகள் மனதில் வைத்திருக்கும் ஆசைகளுக்காக அவர்களுக்கு இந்த படங்களை விளக்கி விவரிக்கின்றேன். எங்கள் குடும்பம் முழுமையும் உங்கள் பதிவு எழுத்து பயன்படுகின்றது,

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு :)

அன்பரசன் said...

//சிநேக புன்னகையில் ஆரம்பித்து தமிழின் சில கெட்ட வார்த்தைகளை சொல்லித்தரும் அளவுக்கு பழக்கம்.....//

நல்ல பழக்கம்.

தொடர்ந்து எழுதுங்க யோகேஷ்.

YOGA.S.Fr said...

போஸ்ட் ஆபீசில ஆணி புடுங்குறீங்களோ?அமேரிக்கா தெரியாது!இரிந்தாலும்,இங்க பிரான்சில தெரு கிளீன் பண்ணற சிறிய,பெரிய லாரிங்க வலப்புறம் ஸ்டேரிங் இருக்கும்!(பிரான்சிலயும் இடது பக்கம் ஸ்டேரிங்கு)

அஹ‌ம‌து இர்ஷாத் said...

Nice POST....

ஜெயந்த் கிருஷ்ணா said...

வந்திட்டீங்கல்ல..

a said...

@சிவா : ஆமாங்க..........
@சி.பி.செந்தில்குமார் : அட. இது கூட நல்லா இருக்கே...........

a said...

@ஜோதிஜி :என்னவச்சி காமெடி கீமெடி பண்ணலீயே.........

நசரேயன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
ரைட்டு :)
//

ஏண்ணே யோகேஷை உசுபேத்தி விடுறீங்க ?

a said...

தளபதி : ஏன் இந்த கொல வெறி?????

Chitra said...

Good "post"..... :-)

ப்ரியமுடன் வசந்த் said...

அப்டேட் ஆயிட்டே இருங்கோ!

க ரா said...

ஆஹாச்சிறந்த பதிவு :)

பழமைபேசி said...

ஆகா....

vasu balaji said...

ty for sharing. new info for me

a said...

@அப்துல்லா அண்ணே : டபுள் ரைட்டு.........

a said...

@அன்பரசன் : நன்றி...........
@YOGA.S.Fr : //போஸ்ட் ஆபீசில ஆணி புடுங்குறீங்களோ?//
இல்லீங்கோ..........

a said...

@ அஹ‌ம‌து இர்ஷாத் : நன்றி........
@ வெறும்பய : ஆமங்கோவ்.........
@ சித்ரா : நன்றி..........
@ ப்ரியமுடன் வசந்த் : நன்றி. கண்டிப்பாக........
@ இராமசாமி கண்ணண் : நன்றிங்க்ண்ணா
@ பழமைபேசி : ரொம்ப களைப்பா இருக்கீங்களோ?
@ வானம்பாடிகள் : அப்படியா .. நன்றி சார்

சின்னப் பையன் said...

ஆஹா... வட போச்சே!!!

a said...

@ ச்சின்னப் பையன் : Anne kavala padatheenka...

மங்குனி அமைச்சர் said...

இப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலங்க............. நடக்காதுன்ணும் தெரியும்..... ///

உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

R. Gopi said...

யோகேஷ், அந்த பாக்கியம் ராமசாமி ஜோக்கை சொல்லுங்க

a said...

@ மங்குனி அமைசர் : Nantri....

a said...

@ கோபி ராமமூர்த்தி :

ஒருநாள் பாக்கியம் மாமி மாமாவிடம் ஒரு லெட்டரை கொடுத்து போஸ்ட் பண்ணிவரும்படி சொல்லுவார்....... மாமாவோ அந்த லெட்டரை வீட்டு வாசலில் இருக்கும் லெட்டர் பாக்ஸில் போட்டுவிட்டு வந்து மாமியிடம் ஜம்பமாக பேசுவார்....

dr.tj vadivukkarasi said...

nice joke.naan andha baakiyam matter pathi sonnen.good post too.

ம.தி.சுதா said...

படங்கள் அருமையாக இருக்கிறது....

a said...

@vadivukkarasi : நன்றி...
@ ம.தி.சுதா : நன்றி

சாமக்கோடங்கி said...

அமெரிக்காவின் தபால் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி..

Menaga Sathia said...

nice photo & post!!

pichaikaaran said...

இதே போல மேலும் எழுதுங்கள்...

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment